Home
Mobile

சைலெண்டாக அறிமுகமான புதிய OPPO 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ3 (OPPO A3) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு, ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ஏ3 அம்சங்கள் (OPPO A3 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் ( AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1200 nits peak brightness), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz touch sampling rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சைலெண்டாக அறிமுகமான புதிய OPPO 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) 6என்எம் சிப்செட் உடன் ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

கலர் ஒஎஸ் 14 (Color OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-display fingerprint scanner)வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W SUPERVOOC Fast Charging) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சைலெண்டாக அறிமுகமான புதிய OPPO 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ட்ரான்குலிட்டி பிளாக் (Tranquillity Black), அரோரா பர்பிள் (Aurora Purple)மற்றும் மவுண்டன் ஸ்ட்ரீம் கிரீன் (Mountain Stream Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

குறிப்பாக இந்த ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1599 yuan (இந்திய மதிப்பில் ரூ.ரூ. 18,365)-ஆக உள்ளது. வரும் ஜூலை 5-ம் தேதி இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A3 with Snapdragon 695, 12GB RAM launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X