வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்.. 67W சார்ஜிங்.. 64MP கேமரா.. 512GB மெமரி.. எந்த போன்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ3 ப்ரோ (OPPO A3 Pro ) ஸ்மார்ட்போனை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் சமீபத்தில் தான் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 64எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது BIS சான்றிதழ் தளத்தில் இந்த ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. அதுவும் இந்த போனின் மாடல் நம்பர் CPH2667 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, வரும் வாரங்களில் இந்த ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ3 ப்ரோ அம்சங்கள் ( OPPO A3 Pro Specifications): 6.7 இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) வசதியுடன் இந்த புதிய ஒப்போ ஏ3 ப்ரோ இந்தியாவுக்கும். மேலும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மூலம் இயங்குகிறது இந்த ஒப்போ போன். IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த போன். அதாவது கூலிங் வாட்டர் மட்டுமல்லாமல், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ட்டும் கிடைக்கிறது. இதுதவிர இந்த போனுக்கு கிரிஸ்டல் கிளாஸ் புரொடெக்சன் (Oppo Crystal Glass Protection)கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
64 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3 ப்ரோ போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். எனவே 22 நிமிடங்களில் இந்த போனை 56 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். மேலும்ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ஒப்போ ஏ3 ப்ரோ போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு அசூர் (கிளாஸ்), மவுன்டெய்ன் (லெதர்) மற்றும் யுன்ஜின் பிங்க் (லெதர்)நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications