Home
Mobile

திகைப்பூட்டும் டிசைன் மற்றும் ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro-வின் வருகையை அறிவிக்கும் OPPO!

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

OPPO நிறுவனத்தின் ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டைல் ​​மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் கலவையை பட்ஜெட் விலைக்குறியீட்டில் வழங்குவதற்காக நன்கு அறியப்படுகின்றன. அப்படியான ஏ-சீரீஸ் குடும்பத்தின் சமீபத்திய உறுப்பினராக, புதிய A3 Pro மாடல் சேர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் OPPO நிறுவனம் அதன் ஏ சீரீஸ் சூத்திரத்தை மீண்டும் ஒருமுறை மேம்படுத்தியுள்ளது. நாங்கள் OPPO A3 Pro ஸ்மார்ட்போனுடன் சிறிது நேரம் செலவிட்டோம். அப்படியாக இந்த ஸ்மார்ட்போன் குறித்த எங்களுடைய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ் இதோ:

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி- பிளாக்ஷிப் கிரேட் ட்ராப் & ஸ்பிளாஸ் ப்ரொடெக்ஷன்!

OPPO A3 Pro ஸ்மார்ட்போன் ஆனது இராணுவ தர அதிர்ச்சி எதிர்ப்பு மற்றும் சுவிஸ் எஸ்ஜிஎஸ் ஆகியவற்றின் டூயல் சர்டிபிஃகேஷனை கொண்டிருக்கும், சேதமடையாத ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடியை கொண்டுள்ளது. வெளியேயும் உள்ளேயும் அதிர்ச்சி-எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இந்நிலையை அடைந்துள்ளது.

டிஸ்பிளேவிற்கு மேல் உள்ள ப்ரொடெக்டிவ் கிளாஸ் ஆனது கூடுதல் பஞ்சர் ரெசிஸ்டென்ஸை வழங்குகிறது. மேலும் OPPO A3 Pro 5G ஸ்மார்ட்போனின் பாக்ஸில் ஷாக் ப்ரூஃப் ப்ரொடெக்டிவ் கேஸும் அனுப்பப்படும். இது வரவேற்கத்தக்க ஆச்சரியத்தை அளிக்கிறது மற்றும் தவறுதலான ட்ராப்களை எளிதில் தாங்கும் அளவுக்கு கடினமானதாகவும் இருக்கிறது.

OPPO A3 Pro ஸ்மார்ட்போனால் ஒரு மேசை மீதிருந்து தற்செயலான வீழ்ச்சியை, எந்த ஒரு புலப்படும் பிரச்சனையும் இல்லாமல் தாங்கி கொள்ள முடிந்தது, மேலும் இது பலமுறை பாக்கெட்டில் சாவிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டாலும் கூட ஒவ்வொரு முறையும் எந்தவொரு கீறலும் இல்லாமல் வெளியே வருகிறது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

OPPO A3 Pro ஸ்மார்ட்போன் ஐபி54 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இது மிகவும் சாமர்த்தியமாக ஸ்பிளாஷ் டச் அம்சத்துடன் இணைந்து, நீர் துளிகள் அல்லது மிஸ்ட் வாட்டர் துளிகளுடன் கூட டிஸ்பிளேவை பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. ஒருவேளை நீங்கள் ஜிம்மில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் ஒரு அமர்வுக்குப் பிறகு உங்கள் உள்ளங்கைகள் வியர்வையாக இருந்தாலும் அல்லது தற்செயலாக சிறிது தண்ணீர் உங்கள் கரங்களில் படித்திருந்தாலும், OPPO A3 Pro இன் டிஸ்ப்ளே சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த புதிய ஸ்மார்ட்போன் தவறுதலாக கீழே விழுந்தாலோ அல்லது தவறவிடப்பட்டாலோ, இதன் உல்பாகங்கள் சேதமடையாமல் இருக்கும்படி, இதன் வடிவமைப்பு ஷாக் அப்சார்ப்ஷன் அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, இதன் மாதர் போர்டு மேற்புற கவர், ஏரோஸ்பேஸ் கிரேட் AM04 விருப்பத்துடன் கூடிய அலுமினியம் அல்லாய் உடன் வருகிறது.

OPPO A3 Pro ஸ்மார்ட்போனின் முக்கியமான இன்டர்னல் பாகங்கள் இம்பாக்ட் ரெசிஸ்டன்ஸ் அதிகரிக்க உதவும் இடையகப் பொருட்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. OPPO தனது ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அளவு அதிர்ச்சியை உறிஞ்சும் பிரத்தியேக இடங்களை ஃபோனுக்குள் விட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இம்பாக்ட் மற்றும் வீழ்ச்சிகளுக்கு எதிர்ப்பை அதிகரிக்க குறிப்பிடத்தக்க பகுதிகளை பாதுகாப்பாக வைக்கிறது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

கண்களை கவரும் பிரீமியம் டிசைன்!

OPPO A3 Pro ஸ்மார்ட்போனின் பிரீமியம் ஜொலிக்கும் வடிவமைப்பு உண்மையில் பிரகாசமாக இருக்கிறது. நீங்கள் அதை வெளியே இழுக்கும்போது உங்கள் கண்களை ஈர்க்கும் வகையில் ஒளியைப் பிரதிபலிக்கிறது. இந்த போனின் பிரேம் உயர்-பளபளப்பான வடிவமைப்பை பெற்றுள்ளது. இது அதிக பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் டூயல் கேமரா அமைப்பிற்கான ரெக்ட்டான்குளர் கட்அவுட் உடன் பிரீமியம் அழகை போனுக்கு கூடுதலாக சேர்த்துள்ளது. இந்த போனின் எடை வெறும் 186 கிராம் மட்டுமே இருக்கிறது. இது 7.68 மிமீ ஸ்லிம்மாக உள்ளது. OPPO A3 Pro, மூன்லைட் பர்பில் மற்றும் ஸ்டாரி பிளாக் ஆகிய 2 நிறங்களில் வருகிறது. மூன்லைட் பர்பிள் வேரியண்ட் ஒப்போவின் மேக்னெட்டிக் பார்ட்டிகள் காந்த துகள் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஸ்டாரி பிளாக் மாடல் ஒரு மேட் அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒப்போவின் சிக்னேச்சர் க்ளோ செயல்முறைக்கு உட்பட்டுள்ளது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

நீடித்த உழைப்பை வழங்கும் ஹைப்பர் பேட்டரி!

OPPO A3 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ் 45W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜை ஆதரிக்கும் ஒப்போவின் புத்தம் புதிய 5,100mAh ஹைப்பர் எனர்ஜி பேட்டரி பேக்குடன் வருகிறது. புதிய ஹைப்பர் எனர்ஜி பேட்டரி பேக் இரண்டு புதிய பொருட்களைக் கொண்டுள்ளது. இதில் ஒரு புத்தம் புதிய எலக்ட்ரோலைட் பேட்டரி பேக் உள்ளது. இது இரு துருவங்களிலும் செல்ப் ஹீலிங் ஃபிலிம் மற்றும் சிறந்த பேட்டரி செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை வழங்க உதவும் புதிய ஏ/பி டயாபிராம் போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய மெட்டிரியல் மற்றும் கோட்டிங் அனைத்து OPPO A3 Pro போனின் பேட்டரிக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கும். அதேபோல் OPPO A3 Pro 5G போனின் பேட்டரி பேக் 50 மாத பயன்பாட்டிற்குப் பிறகும் அதன் திறனில் 80% க்கும் அதிகமாகத் தக்கவைத்துக் கொள்ளும்இ இது ஆய்வகத்தில் 1600 சுழற்சிகள் (4 ஆண்டுகள் வரை) சார்ஜ் மற்றம் டிஸ்சார்ஜ் சோதனைகள் மூலம தீர்மானிக்கப்பட்டது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

மகிழ்விக்கும் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே!

OPPO நிறுவனம் தனது OPPO A3 Pro போனில் 6.67-இன்ச் ப்ரைட்னஸ் எல்சிடி டிஸ்பிளே பொருத்தியுள்ளது. இது அந்த டிஸ்பிளே ஆனது 850 நிட்ஸ் பீக் ப்ரைட்ன்ஸ் வசதியை வழங்ககிறது. பின்பு வெளிப்புறம் சன்லைட் மோடில் 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வசதியை வழங்குகிறது. கடும் வெயில் கூட இந்த OPPO A3 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாகப் பார்க்க முடியும்.

இந்த போனின் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் சூழ்நிலையைப் பொறுத்து 60 ஹெர்ட்ஸ், 90ஹெர்ட்ஸ், 120 ஹெர்ட்ஸ் மற்றும் 180 ஹெர்ட்ஸ் இடையே மாறலாம். குறிப்பாக OPPO A3 Pro போனில் கேம் விளையாடும் போது உங்கள் கண்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல், உங்கள் கேம்களை அவற்றின் அதிகபட்ச பிரேம் விகிதத்தில் அனுபவிக்க முடியும்.

அதேபோல் இந்த போனின் அல்ட்ரா வால்யூம் மோட் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது ஆடீயோ அவுட்புட் மற்றும் போன் அழைப்புகளைக் கேட்பது முன்னெப்போதையும் விட இப்போது எளிதாக உள்ளது. இது உங்கள் பொழுதுபோக்கு மனநிலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். அல்ட்ரா வால்யூம் மோட் மூலம் போனின் லவுட் ஸ்பீக்கரின் ஒலியளவை 300%வரை அதிகரிக்கிறது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

ஏஐ லிங்க்பூஸ்ட் மூலம் எப்போதும் இணைந்திருங்கள்!

OPPO வின் தனித்துவமான ஏஐ லிங்கஸ் பூஸ்ட் ஆனது அனைத்து இடங்களிலும் நிலையான கனெக்ஷன் வசதிய உறுதி செய்கிறது. குறிப்பாக இந்த வசதிக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

OPPO A3 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ லிங்கஸ் பூஸ்ட் அம்சத்தை பெற்றுள்ளது. இது டெட் சோன்களில் உள்ள வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவிற்கு இடையே ஃபோன் மாற்றுகிறது. பின்பு மென்மையான டேட்டா அனுபவத்திற்காக இரண்டு சிம்களுக்கு இடையில் தானாகவே மாறுகிறது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

ஏஐ திறன்கொண்ட கேமராக்கள்!

OPPO A3 Pro ஆனது ஈர்க்கக்கூடிய 50 எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த கேமரா சிஸ்டமானது, போர்ட்ராய்ட் மோட், ஏஐ போர்ட்ராய்ட் ரீடச்சிங் மற்றும் முழுவதும் நேச்சுரல் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க உதவும் டூயல் வியூ வீடியோ மோட் உடன் வருகிறது. அதேபோல OPPO A3 Pro போனானது, ஏஐ-பவர்ட் ஏஐ கேமரா செட்டப் பீச்சர்களுடன் உங்கள் போட்டோக்களை நீங்கள் விரும்பும் வழியில் கொண்டுவருவதை உறுதி செய்கிறது. OPPO A3 Pro 5G ஆனது, அதன் செக்மெண்டில் ஏஐ பயன்படுத்தும் ஒரே போனாகும். ஏஐ எரைசர் பீச்சரானது, தேவையற்ற எலிமெண்ட்களை உங்களது போட்டோக்களில் இருந்து நீக்குகிறது. ஓப்போவின் செல்ப்-டெவலொப்ட் லார்ஜ் மாடல் இன்டலிஜென்ட் பில்லிங்குக்கு நன்றி.

சூப்பர் ஸ்மூத் பெர்ஃபார்மென்ஸ்!

OPPO A3 Pro ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது ரேம் எக்ஸ்பான்சன் மற்றும் ப்ளூயன்சி புரொடெக்சன் பீச்சர்களுடன் இணைந்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களது போனை மிகவும் ஸ்மூத்தாக வைக்கிறது. கூடுதலாக, ரேம் எக்ஸ்பான்சன் 8 ஜிபி வரை கூடுதல் ரேம் வழங்குகிறது. 8ஜிபி மெமரி மற்றும் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு நன்றி, எல்லா நேரங்களிலும் ஸ்மூதர் மல்டி-ஆப் பயன்பாட்டை உறுதி செய்கிறது. இந்த பீச்சர்கள், டிரினிட்டி எஞ்சினுடன் ஓப்போவின் 50 மாத ஃப்ளூன்சி புரொடெக்சன் டெஸ்டில் தேர்ச்சி பெறுவதற்கு OPPO A3 Pro பங்களிக்கிறது, இது குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு ஸ்மூத் யூசர் எக்ஸ்பீரியன்சுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

திகைப்பூட்டும் டிசைன், ஒப்பிடமுடியாத ட்யூரபிலிட்டி உடன் OPPO A3 Pro!

OPPO A3 Pro-வை பற்றிய இறுதி எண்ணங்கள்!

OPPO A3 Pro ஆனது ஏ சீரிஸ் அல்ட்ரா-டியூரபிலிட்டி வழியில் செல்வதை பார்க்கிறது. இது இந்திய சந்தையில் மிகவும் டியூரபிள் போன்களில் ஒன்றாகும். நீடித்த உழைப்பை உறுதிபடுத்துவடன் உயர்தர வடிவமைப்பு மற்றும் நீடித்த செயல்திறன் உறுதிமொழியுடன் கூடிய OPPO A3 Pro-வுக்கு மாறுபவர்களை உண்மையில் வாழ்க்கையில் முன்னேற்றுகிறது.

OPPO A3 Pro ஆனது மூன்லைட் பர்பிள். ஸ்டாரி பிளாக் கலர்களில் 24ஆம் தேதி ஜூன் 2024 முதல் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை 128ஜிபி மெமரியுடன் ரூ.17,999ஆகவும் மற்றும் 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட், OPPO ஸ்டோர் மற்றும் மென்லைன் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கும்.

கஸ்டமர்கள், எச்டிஎப்சி பேங்க், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பிளாட் 10 சதவீத உடனடி கேஷ்பேக்கை பெறலாம், மேலும், லீடிங் பார்ட்னர்களுடன் முன்பணம் செலுத்தாமல் 6 மாதங்கள் வரை நோகாஸ்ட் ஈஎம்ஐ மற்றும் நுகர்வோர் கடன்களை அனுபவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
OPPO A3 Pro First Impressions Dazzling Design Unmatched Durability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X