அதிர போகுது ஆர்டர்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. இந்தியாவில் புது OPPO 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் டைமன்சிட்டி சிப்செட், 5100எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A3 Pro 5G specifications): 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், ப்ளூ கிளாஸ் டபுள் டெம்பர்டு கிளாஸ் (Blue Glass double tempered glass)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 630 6எம்எம் (octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU)கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய ஒப்போ போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.
கலர்ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அமைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த ஒப்போது ஏ3 ப்ரோ 5ஜி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5எம்ம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

5100எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W SuperVOOC fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன்.மூன்லைட் பர்பிள் (Moonlight Purple) மற்றும் ஸ்டாரி பிளாக் (Starry Black)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications