Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 5100mAh பேட்டரி.. 45W சூப்பர்வூக்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் ரூ.15000 பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் பிரீமியம் டிசைனும் கொண்ட போனை தேடிக் கொண்டிருந்தால் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட்டில் கிடைக்கும் ஓபேபோ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) மாடலுக்கு செல்லுங்கள். 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5100mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 2 டிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், டேமேஜ் ப்ரூஃப், ஸ்பிளாஷ் டச் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ஏ3 5ஜி போனின் விவரங்கள் இதோ.

இந்த ஓப்போவில் ஏஐ பீச்சர்கள் வருகின்றன. இது பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களாக இருக்கின்றன. ஆகவே, கேமரா பிரியர்களுக்கான ஏஐ எரைசர் (AI Eraser), ஃபாஸ்ட் ஷேரிங், நேவிகேஷன் மற்றும் கனெக்டிவிட்டிக்காக ஏஐ லிங்க் பூஸ்ட் (AI Link Boost) மற்றும் வாய்ஸ் கால்களுக்காக அல்ட்ரா வால்யூம் மோட் (Ultra Volume Mode) கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 5100mAh பேட்டரி மாடல்!

டிசைனிலும் பிரீமியம் போன்களில் எதிர்பார்க்கும்படியான ஆல்-ரவுண்ட் புரொடெக்சன் கிடைக்கிறது. அதாவது, 360 டிகிரி டேமேஜ் ப்ரூஃப், ஸ்பிளாஷ் டச் போன்றவை கிடைக்கிறது. 7.68 மிமீ ஸ்லிம் பாடியில் பிரீமியம் மெட்டாலிக் லுக் கொடுக்கிறது. டூயல்-டோனில் மூன்லைட் பர்பிள் (Moonlight Purple) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) கலர்களில் வருகிறது.

ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A3 Pro 5G Specifications): இந்த ஓப்போவின் பர்ஃபாமென்ஸ் பார்க்கையில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கொடுக்கும் 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) பேக் செய்துள்ளது.

மேலும், ஜிபியு (GPU) ஆனது மாலி ஜி57 (Mali G57) மட்டுமே இருக்கிறது. இந்த ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இருக்கிறது. 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 ரேம் மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன.

ஆகவே, இந்த ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியுடனும் ஆர்டர் செய்து கொள்ளலாம். 360 புரொடெக்சன் கொண்டிருப்பதால், டிஸ்பிளேவுக்கும் ப்ளூ கிளாஸ் பாதுகாப்புக்கு கிடைக்கிறது. 6.67 இன்ச் (1604 × 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே இருக்கிறது.

இந்த எல்சிடியில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. மேலும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டூயல் ரியர் செட்டப் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. டைப்-சி போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஓப்போ போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 17,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.16,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A3 Pro 5G With 50MP Camera Gets 14 Percent Discount in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X