அடுத்த "ஈயடிச்சான் காப்பி" ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஒப்போ.!

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

|

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன இது 19: 9 என்கிற திரை விகிதத்திலான பெஸல்லெஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போறே உள்ளது.

அடுத்த

இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக இதன் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு உள்ளது. மற்ற சமீபத்திய ஒப்போ ஸ்மார்ட்போன்களை போன்றே, இதுவும் சில ஏஐ சார்ந்த அழகு மற்றும் காட்சி அங்கீகார அம்சங்களை கொண்டு வருகிறது. மேலும் தடையில்லா கேமிங்கிற்காக, கேம் மோட் ஒன்றையும், பெஸல்லெஸ் டிஸ்பிளேவிற்கு மிக பொருத்தமான சைகைகள் மற்றும் ஏஐ அடிப்படையிலான ஸ்மார்ட் அசிஸ்டென்ட் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. உடனே இந்த ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போன், 128-புள்ளி முகத்தை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது, அது ஸ்மார்ட்போனை வெறும் 0.08 வினாடிகளில் திறக்க உதவும்.

ஒப்போ ஏ3 விலை:
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 ஆனது தோராயமாக ரூ.22,100/- என்கிற புள்ளியில் இந்திய சந்தையை எட்டலாம். பிளாக், பின்க், ரெட் மற்றும் சில்வர் போன்ற நான்கு வண்ணம் மாறுபாடுகளில் வாங்க கிடைக்கும்.

ஒப்போ ஏ3 அம்சங்கள்:
அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 ஆனது இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்டுள்ளது. கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையின் கீழ் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 6.2 அங்குல முழு எச்டி+ (1080x2280 பிக்ஸல்) எல்டிபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் 405ppi என்கிற பிக்சல் அடர்த்தி மற்றும் ஒரு 19: 9 என்கிற திரை விகிதமும் கொண்டுள்ளது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 எஸ்ஓசி உடனான 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா துறையை பொறுத்தவரை, ஒரு 16-மெகாபிக்சல் பின்புற கேமரா (எப் / 1.8 துளை மற்றும் இரட்டை-எல்இடி ப்ளாஷ்) கொண்டுள்ளது. முன் பக்கத்தில் ஒரு எப் / 2.2 துளை உடனான ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருந்தாலும் கூட, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் கொண்டுள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

4ஜி வோல்ட், டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஓடிஜி உடனான மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது. மேலும் ஒப்போ ஏ3 ஆனது ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், ஜியோர்ஸ்கோப் மற்றும் ஒரு பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களையும் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு 3400எம்ஏஎச் பேட்டரி கொண்டு எரியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 156x75.3x7.8 மிமீ மற்றும் 159 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A3 With 6.2-Inch 19:9 Display, 16-Megapixel Camera Launched: Price, Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X