யாரு விடுவா.. ஆல்ரெடி பட்ஜெட்.. இதுல ரூ.2000 டிஸ்கவுண்ட் வேறயா.. ஆர்டர்களை அள்ளும் OPPO 5ஜி போன்!
நீங்களொரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருந்தால்.. அதிலும் குறிப்பாக ஒப்போ பிராண்டட் மாடலை தேடினால்.. ரூ.1000 + ரூ.1000 = ரூ.2000 தள்ளுபடி விலையில் ஒரு நல்ல பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான சரியான நேரம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அது என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
தற்போது ஒப்போ இந்தியா வலைதளத்தில் ஒப்போ ஏ3 5ஜி (Oppo A3 5G) ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) பிஓபி கார்டு (BOBCARD), பெடரல் பேங்க் (Federal Bank), ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) கார்டுகளை பயன்படுத்தி ஒப்போ ஏ3 5ஜி மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது ஒப்போ இந்தியா வலைத்தளத்தில் ரூ.14,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே ரூ.1000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது; கூடுதலாக ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போனை ஓஷன் ப்ளூ மற்றும் நெபுலா ரெட் (Ocean Blue and Nebula Red) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் ஒப்போ இந்தியா இணையதளம் (OPPO India Website) வழியாக வாங்கலாம்.
ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் அளவிலான எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி-ஜி 57 எம்சி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு மிட் - ரேன்ஜ் சிப்செட் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விர்ச்சுவல் ரேம் விரிவாக்க அம்சத்துடன் (Virtual RAM Extension Feature) 6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 128ஜிபி ஈஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது கலர்ஓஎஸ் 14.0.1 (ColorOS 14.0.1) ஓஎஸ்- ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 14 அவுட் பாக்ஸ் (Android 14 Out of box) மூலம் இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸுடன் கூடிய சிங்கிள் 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் மேம்படுத்தப்பட்ட லோ-லைட் செயல்திறனுக்காக ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளேவில் உள்ள கேமரா பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் 5எம்பி சென்சாரை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 5,100mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் ஒப்போவின் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது வைஃபை 5, ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
செக்யூரிட்டி அம்சங்களை பொறுத்தவரை இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face unlock) ஆகிய இரண்டையுமே கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 187 கிராம் மற்றும் 7.7 மிமீ தடிமனை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இராணுவ-தர ஷாக் ரெசிஸ்டன்ஸ் மற்றும் லிக்வுட் ரெசிஸ்டன்ஸையும் கொண்டுள்ளது
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications