தொக்கா தூக்கலாம்.. வெறும் ரூ.12,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. பக்கா பட்ஜெட் மாடல்!
மார்கெட் மிரளும் கம்மியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி மற்றும் டைமன்சிட்டி சிப்செட் போன்ற பக்காவான அம்சங்களுடன் ஓப்போ ஏ2 எக்ஸ் (Oppo A2x) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முழு விவரங்கள் இதோ.
ஓப்போ ஏ2 எக்ஸ் அம்சங்கள் (Oppo A2x Specifications): இந்த ஓப்போ ஏ சீரிஸ் மாடலில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டியர் டிராப் நாட்ச் (Tear Drop Notch) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Nits Peak Brightness) மற்றும் டிசிஐ - பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) வருகிறது. இந்த ஓப்போ மாடலில் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Octa Core MediaTek Dimensity 6020) சிப்செட் வருகிறது. அதோடு மாலி கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் மாடலில் 8 ஜிபி ரேம் + 8 விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.
அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வரயிருக்கிறது. அதே போல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டும் கிடைக்கிறது. இதிலும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதோடு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) கொண்டிருக்கிறது. ஆகவே, எல்இடி பிளாஷ் (LED Flash) லைட்டுடன் கூடிய 13 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் போக்கெ, டைம்-லேப்ஸ், போர்ட்ராய்டு போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதே போல 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. IP54 தர பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஏ சீரிஸ் மாடலில் 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type - C) சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த போன் பேட்டரியோடு சேர்த்து வெறும் 185 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த மாடலானது, பிளாக் (Black), கோல்டு (Gold) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பேக் பேனலும் மிட் ரேஞ்ச் டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் அந்த நாட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,550ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,000ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்மியான விலையில், 16 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் போன்ற அம்சங்கள் வேண்டுமானால், இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் போனை தேர்வு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








