மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.12,575 போதும்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. பக்கா பிரீமியம் டிசைன்.. எந்த மாடல்?
வெறும் ரூ.12,575 பட்ஜெட்டில் பக்கா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களுடன் ஓப்போ ஏ2எக்ஸ் (OPPO A2x) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஓப்போ ஏ2 எக்ஸ் அம்சங்கள் (Oppo A2x Specifications): இந்த ஓப்போ போனில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது.

அதோடு டிசிஐ - பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) வருகிறது. இதுவொரு டியர் டிராப் நாட்ச் (Tear Drop Notch) டிஸ்பிளேவாகும். இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Octa Core MediaTek Dimensity 6020) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) மற்றும் மாலி கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) கொண்டுள்ளது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
இந்த கேமராவில் போக்கெ, போர்ட்ராய்டு போன்ற மோட்கள் உள்ளன. இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் மாடலில் 8 விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.
இந்த 6 ஜிபி மாடலிலும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் இருக்கிறது. இந்த போனுக்கு IP54 தர பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஓப்போ மாடலில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி (Type - C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து வெறும் 185 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த மாடலில் மிட்நைட் பிளாக் (Midnight Black), முகுவாங் கோல்டு (Muguang Gold) மற்றும் ஃபீஷுவாங் பர்பிள் (Feishuang Purple) ஆகிய மூன்று கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802 மற்றும் ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ஓப்போ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,575ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,005ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டது.
மிகவும் கம்மியான விலையில், 12 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் கொண்டிருப்பதால் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இங்கும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.12,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








