ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.17,050 விலை.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஓப்போ பிரியர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிடும் விதமாக 12ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், எச்டி பிளஸ் டிஸ்பிளே, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh போன்ற அம்சங்களுடன் கம்மியான பட்ஜெட்டில் ஓப்போ ஏ2எம் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஓப்போ ஏ2எம் அம்சங்கள் (Oppo A2m Specifications): இந்த ஓப்போ போனின் பாடி பிளாட் ஃபிரேம் டிசைன் (Flat Frame Design) கொண்டுள்ளது. பிரீமியம் கிளாஸ் பேக் பேனல் (Glass Back Panel) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு திக் பெசல்ஸ் (Thick Bezels) கொண்ட டிவ்டிாராப்-நாட்ஜ்ட் டிஸ்பிளே (Dewdrop-notched Display) கொண்டிருக்கிறது.

இந்த ஓப்போ ஏ சீரிஸ் மாடலில் 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 269 பிபிஐ (PPI), 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். மேலும், டிசிஐ - பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) கொண்டிருக்கிறது.
இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) வருகிறது. அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) சிப்செட் மற்றும் மாலி கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஓப்போ போன் மூன்று ரேம் வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதே போல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் கிடைக்கிறது. 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது. அதோடு 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த ஓப்போ மாடலில் சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 13 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் வருகிறது.
இந்த ஓப்போ ஏ2 எம் மாடலில் IP54 தர பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner)வருகிறது. அதோடு 85 டெசிபல் கொண்ட சிங்கிள் ஸ்பீக்கர் (Single Speaker) கொண்டிருக்கிறது. இந்த போனில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack) வருகிறது.
இந்த போனின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, டூயல் 5ஜி (Dual 5G), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), டூயல் பேண்ட் வை-பை (Dual-band WiFi) மற்றும் ஜிஎன்எஸ்எஸ் (GNSS) ஆகியவை வருகின்றன. இந்த ஓப்போ ஏ2எம் போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டு 5,000mAh கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.
இந்த பேட்டரியோடு சேர்த்து 185 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்டார்ரி நைட் பிளாக் (Starry Night Black) மற்றும் ஃபிளையிங் ஃப்ரோஸ்ட் பர்பிள் (Flying Frost Purple) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,050ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.20,377ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.23,704ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டது. மிகவும் கம்மியான பட்ஜெட்டில் பக்காவான டிசைன் மற்றும் நல்ல அம்சங்களை கொண்டிருக்கும் இந்த ஓப்போ விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








