Home
Mobile

ஆளுக்கு ஒன்னு வாங்கலாம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ2 (OPPO A2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது இந்த போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக மீடியாடெக் சிப்செட், ஃபுல் எச்டி டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

 33W சார்ஜிங்.. அறிமுகமானது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

அதாவது 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 2400×1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் சிப்செட் வசதியுடன் உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன்.

 33W சார்ஜிங்.. அறிமுகமானது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

குறிப்பாக 5ஜி, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,340) ஆக உள்ளது.

வரும் நவம்பர் 6-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய ஒப்போ போன். அதேபோல் விரைவில் இந்த ஒப்போ ஏ2 போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A2 with 12GB RAM launched: check price, specifications, sale date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X