மிரளுது மார்கெட்.. OLED டிஸ்பிளே.. 12ஜிபி ரேம்.. 64எம்பி கேமரா.. பட்ஜெட் விலையில் ஒப்போ போன்.. எந்த மாடல்?
கடந்த ஜூலை மாதம் ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் TENAA ஆல் சான்றிதழைப் பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 15-ம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை போன்ற உருவம் கொண்ட இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஒப்போ ஏ2 ப்ரோ (OPPO A2 Pro) போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ2 ப்ரோ அம்சங்கள் (OPPO A2 Pro specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு OLED (curved OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 2412×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate),1300 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 1080 6என்எம் (MediaTek Dimensity 1080 6nm)சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இதனுடன் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு ( Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட சிப்செட் செயல்திறன் வழங்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டு இந்த போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,000 பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications