64MP கேமரா.. 12GB ரேம்.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. அறிமுகமானது புதிய ஒப்போ போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் வளைந்த டிஸ்பிளேவைக் கொண்ட ஒப்போ ஏ2 ப்ரோ (OPPO A2 Pro) ஸ்மாரட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் கர்வ்டு (AMOLED curved) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

டைமன்சிட்டி 7050 6என்எம் பிராசரஸ் (Dimensity 7050 6nm processor) கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அபின்பு கலர்ஓஎஸ் 13.1 ( ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W fast charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு விரைவாக ஒப்போ ஏ2 ப்ரோ போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு என ஐபி54 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 183 கிராம் ஆகும்.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஒன்பிளஸ் போன்ற உருவத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன மாடல்.
பிளாக், டெசர்ட் பிரவுன், Twilight நிறங்களில் ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,820). குறிப்பாக இந்த போனை விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








