ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!
ஓப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன்களுக்கு தற்சமயம் விலைகுறைப்பை அறிவித்தது மும்பையை சேர்ந்த மகேஷ் டெலிகாம்
நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பு
ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன் 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் முறையே ரூ.17,990 மற்றும் ரூ.19,990-என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,490-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ எப்11 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)
பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்.எம் சிப்செட் உடன் 900மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி உள்ளது
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ் 6.0 ஹைப்ரிட் டூயல் சிம் ரியர்
கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி இரண்டாவது பிரைமரி லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4020எம்ஏஎச்
வைபை, ப்ளூடூத், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 3.5எம்.எம் ஆடியோ கைரேகை சென்சார்

ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.1-இன்ச் முழு எச்டி வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்

ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி30 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications