ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது,
தற்சமயம் ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று 2ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு 3ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே
ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.1-இன்ச் முழு எச்டி வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்

மீடியாடெக்
ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி30 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மெமரி
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications