Home
Mobile

அரட்டும் பட்ஜெட்.. வெறும் ரூ.10000க்கு 5000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. Dual கேமரா.. எந்த மாடல்?

ரூ.10000 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற மிரளும் அம்சங்களுடன் பிரீமியம் லெவல் டிசைனில் ஓப்போ ஏ18 (Oppo A18) போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ஓப்போ ஏ18 அம்சங்கள் (Oppo A18 Specification): இந்த மாடலில் 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90Hz டச் சாம்பிளிங் ரேட் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.10000க்கு 5000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. Dual கேமரா!

அதோடு டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் (Color Depth) சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி (MediaTek Helio G80 SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ ஏ18 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) வருகிறது. இந்த ஓப்போ ஏ சீரிஸ் மாடலில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்சச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதோடு 1 டிபிக்கான் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஏ18 போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 8 எம்பி மெயின் கேமரா (Main Camera) + 2 எம்பி மோனோ கேமரா (Mono Camera) கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் நைட் (Night), டைம்-லேப்ஸ் (Time-lapse), போர்ட்ராய்டு (Portrait), பானோ (PANO) போன்ற மோட்கள் வருகின்றன. அதே போல ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouching) மற்றும் போர்ட்ராய்டு போக்கெ (Portrait Bokeh) சப்போர்ட் உள்ளது.

இந்த போனுக்கு IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IPX5 தர டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Side Fingerprint Unlock) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வருகிறது.

அதோடு 3.5 மிமீ இயர்போன் ஜாக் (Earphone Jack), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் வை-பை 5 (Wi-Fi 5) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஓப்போ ஏ18 போன் குளோவிங் பிளாக் (Glowing Black) மற்றும் குளோவிங் ப்ளூ (Glowing Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடல் அரபு அமீரகத்தில் (UAE) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏனென்றால், இந்த போனின் இந்திய வெளியீட்டுக்கான பிஐஎஸ் சான்றிதழ் இந்த மாத தொடக்கத்தில் பெறப்பட்டுவிட்டது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை வெளியாவில்லை.

இருப்பினும், ரூ.10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று மார்கெட் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இந்த அம்சங்களை வைத்து பார்த்தால், அதிகபட்சம் ரூ.12,000 பட்ஜெட்டுக்குள் மட்டுமே விலை இருக்கும். மலிவு பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன், பக்காவான பேட்டரி மற்றும் சிப்செட் கொண்ட போன் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த போன் நல்ல தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A18 with 8MP Camera, Helio G85 Chip, 5000mAh Battery Launched in UAE Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X