Home
Mobile

நச்சுனு பட்ஜெட்.. ரூ.11,499 போதும்.. 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது ஒப்போ மாடல்..

ஒப்போ நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக ஒப்போ ஏ18 போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் ரூ.9,999 விலையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் ஒப்போ ஏ18 போனின் மற்றொரு வேரியண்ட் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ18 வேரியண்ட் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஒப்போ ஏ18 மாடலின் விலை ரூ.11,499 ஆக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒப்போ ஏ18 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது ஒப்போ மாடல்..

ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90Hz டச் சாம்பிளிங் ரேட் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதோடு இதன் டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் (Color Depth) சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ ஏ18 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) வருகிறது. அதோடு 1 டிபிக்கான் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஏ18 போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 8 எம்பி மெயின் கேமரா (Main Camera) + 2 எம்பி மோனோ கேமரா (Mono Camera) கொடுக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ஏ18 போனில் 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் நைட் (Night), டைம்-லேப்ஸ் (Time-lapse), போர்ட்ராய்டு (Portrait), பானோ (PANO) போன்ற மோட்கள் வருகின்றன. அதே போல ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouching) மற்றும் போர்ட்ராய்டு போக்கே (Portrait Bokeh) சப்போர்ட் உள்ளது.

இந்த ஓப்போ ஏ18 போனுக்கு IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IPX5 தர டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Side Fingerprint Unlock) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வருகிறது.

128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது ஒப்போ மாடல்..

3.5 மிமீ இயர்போன் ஜாக் (Earphone Jack), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் வை-பை 5 (Wi-Fi 5) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஓப்போ ஏ18 போன் குளோவிங் பிளாக் (Glowing Black) மற்றும் குளோவிங் ப்ளூ (Glowing Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல் ஓப்போ ஏ18 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 4ஜி போன் ஆகும். குறிப்பாக கம்மி விலையில் அசத்தலான அம்சங்களைக் கொண்ட 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனை வாங்குவது மிகவும் நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A18 128GB model launched in India: check price, specifications, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X