ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போனை நெதர்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் அனைத்து அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த புதிய ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகைஆதரவுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக Crystal Black மற்றும் Pearl Blue நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16எஸ் ஸ்மார்ட்போன். விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.13,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications