Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும். அதேபோல் இந்த சாதனம் ஏற்கனவே பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் வௌளிவந்த தகவலின்படி வரும்

ஆன்லைனில் வௌளிவந்த தகவலின்படி வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த புதிய ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன்இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன்.

 ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 லைட் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாககொண்டுஇந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன்

புதிய ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ16கே

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

16கே ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச்

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, சூப்பர் பவர் சேவிங் மோட், நைட் ஃபில்டர்கள் மற்றும் ஆப்டிமைஸ் நைட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 வைஃபை, புளூடூத் வி5, 3.5மிமீ ஹெ

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 175 கிராம் என்று
கூறப்படுகிறது. .அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo A16K May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X