Home
Mobile

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடலை பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில்
அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இப்போது இந்த ஒப்போ ஏ16கே ஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனின் விலை PHP 6,999 (இந்திய மதிப்பில் ரூ.10,300)-ஆகஉள்ளது. இப்போது இந்த ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

 ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல் ஆ

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 லைட் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

புதிய ஒப்போ ஏ16கே

புதிய ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி ரியர் கேமரா

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4230 எம்ஏஎச்

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, சூப்பர் பவர் சேவிங் மோட், நைட் ஃபில்டர்கள் மற்றும் ஆப்டிமைஸ் நைட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

புளூடூத் வி5, 3.5மிமீ

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 175 கிராம்
என்று கூறப்படுகிறது.அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிவந்த தகவலின்ப

அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ஒப்போ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

நிறுவனம் அறிமுகம் செய்ய

ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள OPPO EV எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலைப் பற்றி பிரபல Tipster கூறுகையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 60 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஒப்போ
நிறுவனம் டாடா நானோ போன்ற சிறிய காரை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் கார் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ நிறுவனம் பேட்

இதுதவிர ஒப்போ நிறுவனம் பேட்டரிகள் மற்றும் பிற உதிரிபாகங்களுக்கான உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்நிறுவனம் கொண்டு வரும் புதிய தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள்
வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Oppo A16K Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X