இந்தியாவில் ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்? விலை?
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் முழு விவரங்களையும் பார்ப்போம்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனை ரூ.10,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன். சன்லைட் டிஸ்ப்ளே, மூன்லைட் டிஸ்ப்ளே மற்றும் AI ஸ்மார்ட் பேக்லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

புதிய ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே
இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 லைட் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமானவீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, சூப்பர் பவர் சேவிங் மோட், நைட் ஃபில்டர்கள் மற்றும் ஆப்டிமைஸ் நைட் சார்ஜிங் உள்ளிட்டபல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications