Home
Mobile

ரூ.13,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அசத்தலான கேமராக்கள், தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒப்போ ஏ16

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990-ஆக உள்ளது.
மேலும் அமேசான் வலைத்தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கிகார்டுகளை பயன்படுத்தி இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.750 வரை தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு Crystal Black, Pearl Blue நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ16

இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு
அருமையாக இருக்கும். அதேசமயம் இதன் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

ஒப்போ ஏ16

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். பின்பு ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

13எம்பி பிரைமரி சென்சார்

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

இந்த புதிய சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎ

இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.அதேபோல் இந்த சாதனத்தின் எடை 190 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A16 With MediaTek Helio G35 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X