செப்டம்பர் 20: இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 20 இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. மேலும் இந்த சாதனம் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் மூன்று ரியர் கேமராக்கள், பெரிய டிஸ்பிளே, தனித்துவமான மென்பொருள் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தோனேசியாவில் ஒப்போ ஏ 16 அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் இந்த சாதனத்தின் விலை IDR 1,999,000 (இந்திய மதிப்பில ரூ.10,300) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்Crystal Black, Pearl Blue மற்றும் Space Silver நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். . இப்போது வரும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் கூட 48எம்பி கேமராவுடன் வருகிறது, ஆனால் இந்த ஒப்போ ஏ16 சாதனம் ஆனது வெறும் 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. அதாவது 48எம்பி ரியர் கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார் ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத்,வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications