அமோக வரவேற்பு: ஒப்போ ஏ15எஸ் புது வேரியண்ட் அறிமுகம்- 4 ஜிபி ரேம்,128 ஜிபி சேமிப்பு- கம்மி விலை!
ஒப்போ ஏ15 எஸ் புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ15 எஸ் புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ15 எஸ் புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,490-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முக்கிய சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அமேசானில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ.12,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.11,490 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் ஃபேன்ஸி வைட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Oppo A15s சிறப்பம்சங்கள்
ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 720x1600 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை வசதி இருக்கிறது.

4230 எம்ஏஎச் பேட்டரி வசதி
ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. செல்பி வசதிக்கு 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications