இந்தியா: விரைவில் 6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம், 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபி/3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் மெமரி டிஃப்ராக்மென்டேஷன் 2.0 எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செயலியின் சேமிப்பை தனித்தனியே பிரித்து வழங்குவதற்கும், கணினியை போல் செயல்திறனை தேவைக்கேற்ப 5% அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

இந்த ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி உள்ளது. ஹைப்பர் பூஸ்ட் 2.1 கேம்கள் விளையாடுவதற்கு கிராபிக்ஸ் ஃபிரேம் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரித்து வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது கேம் விளையாடும்போது டச் பூஸ்ட் வசதியும் அளிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ15 பாதுகாப்பு வசதிக்கென பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 4,230mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது, இதை சார்ஜ் செய்வதற்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications