ரூ.9,500-க்கு கீழ் அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ஏ15 புது வேரியண்ட் அறிமுகம்!

|

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த புதிய வேரியண்ட் விலை ரூ.9,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் முக்கிய சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும்.

பட்ஜெட்டுக்கு இணக்கமான விலை

பட்ஜெட்டுக்கு இணக்கமான விலை

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் முன்னதாக 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு வந்தது. இதன் விலை ரூ.10,990 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ வெளியிட்ட புதிய வேரியண்ட் குறித்த அறிக்கையில், பட்ஜெட்டுக்கு இணக்கமான விலையில் கூடுதல் அம்சங்களோடு கூடிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பயனர்களுக்கு ஒப்போ இந்த போனை கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே

6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே 720x1600 பிக்சல்கள் தீர்மானம், 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ செயலி

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ செயலி

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

கணினியை போல் செயல்திறன்

கணினியை போல் செயல்திறன்

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் மெமரி டிஃப்ராக்மென்டேஷன் 2.0 எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செயலியின் சேமிப்பை தனித்தனியே பிரித்து வழங்குவதற்கும், கணினியை போல் செயல்திறனை தேவைக்கேற்ப 5% அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

அட்டகாச அம்சம்: இனி வாட்ஸ்அப் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்- எப்படி தெரியுமா? இதோ எளிய வழிமுறைகள்!

டச் பூஸ்ட் வசதி

டச் பூஸ்ட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி உள்ளது. ஹைப்பர் பூஸ்ட் 2.1 கேம்கள் விளையாடுவதற்கு கிராபிக்ஸ் ஃபிரேம் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரித்து வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது கேம் விளையாடும்போது டச் பூஸ்ட் வசதியும் அளிக்கிறது.

13எம்பி பிரைமரி லென்ஸ்

13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பின்புறத்தில் கைரேகை சென்சார்

பின்புறத்தில் கைரேகை சென்சார்

ஒப்போ ஏ15 பாதுகாப்பு வசதிக்கென பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 4,230mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது, இதை சார்ஜ் செய்வதற்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A15 Smartphone New Variant Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X