இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்.! விலை எவ்வளவு தெரியுமா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அமேசான் வலைத்தளம் மூலம் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்டரி ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும்.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990-ஆக உள்ளது. மேலும் தேர்வுசெய்யப்பட்டவங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த சாதனத்திற்குஇஎம்ஐ வசதி கூட அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே 720x1600 பிக்சல்கள் தீர்மானம், 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனதுஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் மெமரி டிஃப்ராக்மென்டேஷன் 2.0 எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செயலியின் சேமிப்பை தனித்தனியே பிரித்து வழங்குவதற்கும், கணினியை போல் செயல்திறனை தேவைக்கேற்ப 5% அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி உள்ளது. ஹைப்பர் பூஸ்ட் 2.1 கேம்கள் விளையாடுவதற்கு கிராபிக்ஸ் ஃபிரேம் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரித்து வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது கேம் விளையாடும்போது டச் பூஸ்ட் வசதியும் அளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ15 பாதுகாப்பு வசதிக்கென பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 4,230mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது, இதை சார்ஜ் செய்வதற்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications