Home
Mobile

மூன்று கேமரா, 3ஜிபி ரேம் உடன் ஒப்போ ஏ15: விலை ரூ.10,990 மட்டுமே!

ஒப்போ ஏ 15 இந்தியாவில் டிரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் ஹீலியோ பி 35 சோசி ரூ.10,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்போ ஏ 15 டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்டரி ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ ஏ15 என்ற புதிய ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ15 என்ற புதிய ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் இன்று தனது ஏ சீரிஸ் தொடரில் ஒப்போ ஏ15 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு ரூ.10,990 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. ஒப்போ ஏ 15 டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்டரி ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள்

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள்

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே 720x1600 பிக்சல்கள் தீர்மானம், 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் கண்களின் அசௌகரியத்தை போக்கும் வகையிலான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. அது பாதிப்பு ஏற்படுத்தும் ப்ளூ ஒளியை ஃபில்டர் செய்யும்படியான அம்சம் உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC

ஒப்போ ஏ15 ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் இருக்கிறது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் சிறப்பு கருவி

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் சிறப்பு கருவி

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் மெமரி டிஃப்ராக்மென்டேஷன் 2.0 எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செயலியின் சேமிப்பை தனித்தனியே பிரித்து வழங்குவதற்கும், கணினியை போல் செயல்திறனை தேவைக்கேற்ப 5% அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி

ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி

ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் 2.1 கருவி உள்ளது. ஹைப்பர் பூஸ்ட் 2.1 கேம்கள் விளையாடுவதற்கு கிராபிக்ஸ் ஃபிரேம் வீதத்தை தேவைக்கேற்ப அதிகரித்து வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது கேம் விளையாடும்போது டச் பூஸ்ட் வசதியும் அளிக்கிறது.

13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. செல்பி வசதிக்கென முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

4,230mAh பேட்டரி

4,230mAh பேட்டரி

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு வசதிக்கென பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 4,230mAh பேட்டரியை கொண்டுள்ளது, இதை சார்ஜ் செய்வதற்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.

ஆண்ட்ராயாட் 10 ஆதரவு

ஆண்ட்ராயாட் 10 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராயாட் 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A15 Launched With Triple Camera, 3GB RAM and More: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X