Oppo A12 Launched: டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ12 ஸமார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றிய தகவலை அந்நிறுவனம் வெளயிடவில்லை,மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் கேமரா வசதி உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே வசதி

அசத்தலான டிஸ்பிளே வசதி

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1,520 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

3எம்பி பிரைமரி

ஒப்போ ஏ12 ஸ்மார்டபோனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
வசதிகள் இவற்றுள் அடக்கம்.

கொரோனா வைரஸால் இறப்பவர்களின் உடல்கள் எவ்வாறு அகற்றப்பட வேண்டும்? WHO சொன்னது இதுதான்!கொரோனா வைரஸால் இறப்பவர்களின் உடல்கள் எவ்வாறு அகற்றப்பட வேண்டும்? WHO சொன்னது இதுதான்!

 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி

ஒப்போ ஏ12 ஸமார்ட்போன் மாடலில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கைரேகை சென்சார் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹீலியோ பி35 எஸ்ஒசி சிப்செட்

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

 4320எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 4320எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை.

 புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், 3.5எம்எம்

4 ஜி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்அடக்கம். மேலும் இந்த ஸ்மார்டபோனின் ஆரம்ப விலை ரூ.12,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A12 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X