ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியுடன் வெளிவந்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.11,800)-ஆகஉள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ11எஸ் மாடலின் விலை CNY 1,199(இந்தியமதிப்பில் ரூ.14,100) ஆக உள்ளது.

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ColorOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகா கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ 11எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மர்ரட்போன் மாடல்.அதேபோல் ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications