அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விரைவில்- தரமான அம்சத்தோடு ஒப்போ ஏ11 எஸ்!

|

ஒப்போ ஏ 11 எஸ் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்திருக்கின்றன. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 8 ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

ஒப்போ ஏ 11 எஸ்

ஒப்போ ஏ 11 எஸ்

ஒப்போ ஏ 11 எஸ் ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் எனவும் இது மூன்று பின்புற கேமரா அமைப்போடு வரும் எனவும் கூறப்படுகிறது. ஒப்போ ஏ 11 எஸ் ஸ்மார்ட்போனானது ஒப்போவில் இருந்து வரவிருக்கும் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இது ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. ரெண்டர்களை அடுத்து டிப்ஸ்டர் இவான் பிளாஸிடம் இருந்து கசிவு தகவல் வருகிறது. ஒப்போ ஏ 11 எஸ் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

6.5 இன்ச் டிஸ்ப்ளே வசதி

6.5 இன்ச் டிஸ்ப்ளே வசதி

ஒப்போ ஏ 11 எஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு 90 ஹெர்ட்ஸ் எல்சிடி பேனல் ஹோல் பஞ்ச் வடிவமைப்போடு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இது 720 x 1600 பிக்சல்கள் HD+ தீர்மானத்தோடு வரும் என கூறப்படுகிறது. இது 269ppi பிக்சல் அடர்த்தியோடு வரும் எனவும் இது ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் உள்ளிட்ட அமைப்புகளோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா இடம்பெறும் எனவும் இதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்கென 8 மெகாபிக்சல் முன்புற கேமரா இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என்ற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 7.2 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 7.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. அதேபோல் கசிந்த தகவலின்படி பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புற கைரேகை சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது.

பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பம்

பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பம்

அதேபோல் ஒப்போ ஏ 11 எஸ் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் வசதி இருக்கிறது. இடதுபுறத்தில் வால்யூம் அம்சம் இருக்கும். பின்புற ஸ்மார்ட்போனில் செவ்வக வடிவத்தில் மூன்று கேமரா வரிசையாக இருக்கும் எனவும் ஏஐ கேமரா பிராண்டிங் மேலாக எல்இடி ஃபிளாஷ் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் வெள்ளை உட்பட இரண்டு வண்ண விருப்பத்தில் வரும் என ரெண்டர் தகவல் கூறுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12

அதேபோல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஒப்போ ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12 இன் வெளியீட்டுக்கான காலவரிசையை உறுதி செய்துள்ளது. இதன் படி, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12 செப்டம்பர் நடுப்பகுதி முதல் பிற்பகுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஒப்போ உறுதிப்படுத்தியுள்ளது. ColorOS 12 இன் பதிவிறக்கம் செய்யக்கூடிய அதிகாரப்பூர்வ வால்பேப்பர்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 உடன் பிக்சல் 6

ஆண்ட்ராய்டு 12 உடன் பிக்சல் 6

வால்பேப்பரைத் தவிர, நிறுவனம் ColorOS 12 லோகோவில் உருவாகும் பல்வேறு வடிவியல் வடிவங்களைக் கொண்ட ஒரு சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. கலர்ஓஎஸ் 12 இன் படத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் வாட்ச்களில் உள்ள UI ஐக் காட்டுகிறது. ஒப்போவின் இந்த அறிவிப்பு கூகுள் விரைவில் ஆண்ட்ராய்டு 12 உடன் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

File Images

Best Mobiles in India

English summary
Oppo A11s Smartphone Might Launching Soon with these Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X