6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நான்கு ரியர் கேமராக்கள் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசத இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதள ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி +8எம்பி + 2எம்பி +2எம்பி என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போன் மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.15,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications