Home
Mobile

ஃபேஸ் அன்லாக் வசதியுடன் ஓப்போ ஏ1 அறிமுகம்.!

நீலம், சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

ஓப்போ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு நவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தற்சமயம் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் ஓப்போ ஏ1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

ஃபேஸ் அன்லாக் வசதியுடன் ஓப்போ ஏ1 அறிமுகம்.!

நீலம், சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக எப்7 ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக
முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 பியூட்டி மோட்:

பியூட்டி மோட்:

ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் பியூட்டி மோட் எனும் வசதி உள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, போன்ற பல்வேறு இணைப்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஓப்போ ஏ1
ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
விலை:

விலை:

ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.14,400-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A1 With Face Unlock Feature Launched Price Specifications and More ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X