iPhone-க்கு ஆப்பு.. 30 லட்சம் பேர் வாங்க போவதாக கணிப்பு.. OpenAI-யின் முதல் AI Agent போன்.. எப்போது அறிமுகம்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் (iPhone) போன்றவற்றுடன் போட்டியிடுவதற்காக, ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் தனது சொந்த ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்போதைக்கு இது ஏஐ ஏஜென்ட் போன் (AI agent phone) என்று அழைக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை கசியவிட்ட பிறகு, டிஎப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் (TF International Securities) ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ (Ming-Chi Kuo), தற்போது அதன் உருவாக்கம் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் பாதியிலேயே, பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன் வெளியீடு விரைவில் நடக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவை (AI) மையமாக கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டிஎஸ்எம்சி-யின் என்2பி செயல்முறையின் அடிப்படையில் தயாரிக்கப்படும்மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஓப்பன்ஏஐ ஸ்மார்ட்போனின் பெருமளவு உற்பத்தி 2028-ல் தொடங்கும் என்றும், அதன் விவரக்குறிப்புகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ இறுதி செய்யப்படும் என்றும் மேற்குறிப்பிட்ட அதே ஆய்வாளர் தெரிவித்திருந்தார். ஆனால் ஓப்பன்ஏஐ நிறுவனமானது ஏஐ ஏஜென்ட் ஃபோன் துறையில் வளர்ந்து வரும் போட்டியால், இந்த ஸ்மார்ட்போனை முடிந்த வேகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
மேலும், ஓப்பன்ஏஐ ஸ்மார்ட்போனுக்கு மீடியாடெக் பிரத்யேக சிப் சப்ளையராக இருக்க வாய்ப்புள்ளது என்று குவோ கூறுகிறார். இந்த ஸ்மார்ட்போனிற்கான சிப் விநியோகத்திற்காக குவால்காமும் பரிசீலனையில் உள்ளது என்று அந்த ஆய்வாளர் முன்பு கூறியிருந்தார். வரவிருக்கும் இந்த ஓப்பன்ஏஐ போன், 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் டிஎஸ்எம்சி-யின் என்2பி செயல்முறையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் மீடியாடெக் டைமென்சிட்டி 9600 சிப்செட்டின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பில் இயங்கக்கூடும்.
மேம்படுத்தப்பட்ட எச்டிஆர் பைப்லைனை கொண்ட இமேஜ் சிக்னல் பிராசஸர் (ISP) இந்த சிப்செட்டின் முக்கிய சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது. இது பன்முக ஏஐ செயலாக்கத்திற்கான டூயல்-என்பியு கட்டமைப்பு, யுஎப்எஸ் 5.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட LPDDR6 மெமரி ஆகியவற்றை கொண்டிருக்கக்கூடும் என்றும் குவோ கூறுகிறார். இது பாதுகாப்பிற்காக pKVM (ப்ரொடெக்டட் கெர்னல் பேஸ்டு விர்ச்சுவல் மெஷின்) மற்றும் இன்லைன் ஹாஷிங் ஆகியவற்றை வழங்கக்கூடும்.
ஓப்பன்ஏஐ ஸ்மார்ட்போனின் உருவாக்கம் திட்டமிட்டபடி தொடர்ந்தால், 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் மொத்த விநியோகம் சுமார் 30 மில்லியன் யூனிட்களை (30 லட்சம்) எட்டக்கூடும் என்றும் ஆய்வாளர் மிங்-சி குவோ கணித்துளார். விநியோக சங்கிலி கணிப்புகளை பொறுத்தவரை மிங்-சி குவோவுக்கு ஒரு நல்ல சாதனை பதிவு இருந்தாலும், ஓப்பன்ஏஐ தனது சொந்த ஸ்மார்ட்போனை உருவாக்கும் திட்டங்களை இன்னும் அறிவிக்காததால், மேற்கண்ட எல்லா கூற்றுகளையும் முழுமையாக நம்பிவிட முடியாது.
கடந்த மாதம் ஓப்பன்ஏஐ நிறுவனமானது தனது நெக்ஸ்ட் ஜென்ரேஷன் இமேஜ் ஜெனெரேஷன் மாடலை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது சாட்ஜிபிடி இமேஜ்ஸ் 2.0 (ChatGPT Images 2.0) ஆகும். இது பயனர் உள்ளிடும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், மிகவும் துல்லியமான, பயன்படுத்தக்கூடிய மற்றும் சூழலுக்கு ஏற்ற படங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய மாடல் - அறிவுறுத்தல்களை பின்பற்றுதல், பன்மொழி ரெண்டரிங் மற்றும் பட உருவாக்கம் ஆகியவற்றில் மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவை தளமாக கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தின் கூற்றுப்படி சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 ஆனது சாட்ஜிபிடி, கோடெக்ஸ் (Codex) மற்றும் ஏபிஐ (API) முழுவதும் வெளியிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications