ஆர்டர் போட்றாதீங்க.. 1 இல்ல 6 ஆப்ஷன் இருக்கு.. Nothing Phone 2-க்கு பதிலா வேற என்ன போன்களை வாங்கலாம்?
இந்தியாவில், நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனின் திறந்த விற்பனை இன்று (ஜூலை 21) முதல் தொடங்கியது. ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கும் நத்திங் போன் 2 ஆனது நிச்சயமாக ஒரு நல்ல ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
நத்திங் போன் 2 ஆனது ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 சிப்செட், டூயல் 50எம்பி + 50எம்பி கேமரா செட்டப், 32எம்பி செல்ஃபி ஷூட்டர், 120ஹெர்ட்ஸ் 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் உடனான 4,700எம்ஏஎச் பேட்டரி என பல முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இருப்பினும் நத்திங் போன் 2-வை நம்பி வாங்குவதில் உங்களுக்கு ஏதேனும் ஒருசில தயக்கங்கள் இருந்தால்.. கவலைப்பட வேண்டாம்! இதே விலைப்பிரிவில் நத்திங் போன் 2-விற்கு பதிலாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 6 சிறப்பான மற்றும் தரமான ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் (Alternative Smartphones) உள்ளன:
01. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): 6.74-இன்ச் எஃப்எச்டி+ அமோஎல்இடி, 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1, 5000எம்ஏஎச் பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.39,999, 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.44,999.
02. சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ (Samsung Galaxy S21 FE): 6.4-இன்ச் எஃப்எச்டி+ அமோஎல்இடி, 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 4500எம்ஏஎச் பேட்டரி, 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், 12எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.49,999 (8ஜிபி ரேம் + 256ஜிபி) ஆகும்.
03. கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a): 90ஹெர்ட்ஸ் 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, கூகுள் டென்சர் ஜி2 சிப்செட், 4385எம்ஏஎச் பேட்டரி, 18W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங், 64எம்பி + 13எம்பி அல்ட்ரா-வைட் டூயல் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ 43,999 ஆகும்.
04. ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro): காட்சி: 6.78-இன்ச் எஃப்எச்டி+ 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.37,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
05. ஒப்போ ரெனோ 10 ப்ரோ (OPPO Reno 10 Pro): 6.7-இன்ச் எஃப்எச்டி+ 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 4600எம்ஏஎச் பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி + 32எம்பி டெலிஃபோட்டோ + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.39,999 (12ஜிபி ரேம் + 256ஜிபி) ஆகும்.
06. ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13): 60ஹெர்ட்ஸ் 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 3240எம்ஏஎச் பேட்டரி, வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங், 12எம்பி + 12எம்பி அல்ட்ரா-வைட் டூயல் ரியர் கேமரா செட்டப், 12எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. விலை ரூ.60,999 முதல் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








