முதல் பந்திலேயே சிக்ஸர்.. ரூ.3000 ஆஃபர் விலையில் OPEN SALE-ஐ ஆரம்பித்த லேட்டஸ்ட் OnePlus போன்!
இந்தியாவில், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மாடலின் ஓப்பன் சேல் (Open Sale) ஆரம்பமாகி உள்ளது. ஏற்கனவே சுவாரசியமான மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீது எக்கச்சக்கமான விற்பனை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்னென்ன ஆபர்கள் கிடைக்கிறது? இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன விலை? ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது அப்சிடியன் மிட்நைட், மெர்குரியல் சில்வர் மற்றும் ஒயாசிஸ் க்ரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகின்றன.

என்னென்ன விற்பனை சலுகைகள் / தள்ளுபடிகள் கிடைக்கும்? ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி +256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வாங்கும் ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஒன்கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும்; 8ஜிபி +1 28ஜிபி ஆப்ஷனின் மீது ரூ.2,000 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ-யையும் பெறலாம் கூடவே மாணவர்களுக்கு ரூ.600 கூடுதல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் ரெட் கேபிள் கிளப் உறுப்பினராக இருந்தால், ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை வாங்கும் போது இலவச ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட் புரோகிராமை பெறுவீர்கள். கடைசியாக பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிபிஎஃப்எஸ் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கஸ்டமர்களுக்கு 11 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ-யும் கிடைக்கும்.
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு, இதுவரை வெளியான எந்தவொரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிலும், இந்த அளவிலான மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








