Home
Mobile

அலைமோதும் மக்கள் கூட்டம்: ரூ.11,999க்கு இந்தியாவில் அறிமுகமான 12 பேண்ட் Infinix 5G ஸ்மார்ட்போன்!

இன்ஃபினிகஸ் நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போனான Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் நீங்கள் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த 5ஜி போனையே வாங்கலாம்.

Infinix Hot 20 5G

Infinix Hot 20 5G

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் முன்னதாகவே 5ஜி ஆதரவுடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது Infinix Note 12 5G, Note 12 Pro 5G மற்றும் Zero 5G ஆகும். தற்போது இந்த வரிசையில் Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனும் இடம்பெற்றிருக்கிறது. 12 5ஜி பேண்ட் ஆதரவோடு இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம், கேமரா, பேட்டரி உள்ளிட்ட பிற அம்சங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனில் முழு HD+ டிஸ்ப்ளே ஆதரவுடன் கூடிய 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த டிஸ்ப்ளே பாண்டா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

MediaTek Dimensity 810 சிப்செட்

MediaTek Dimensity 810 சிப்செட்

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது 5ஜி இணைப்புக்கான ஆதரவுடன் கூடிய MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் இதே சிப்செட் மூலம் தான் இயக்கப்படுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செவ்வக வடிவத்தில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் துணை ஏஐ கேமரா என டூயல் கேமரா ஆதரவு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தின் டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு கூடிய 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

பாதுகாப்பு அம்சத்துக்கு என ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. ஃபேஸ் அன்லாக், டூயல்-பேண்ட் வைஃபை, 5ஜி, டூயல் சிம், ப்ளூடூத் v5.0, விர்ச்சுவல் ரேம், டிடிஎஸ் ஆடியோ என பல இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இதில் இருக்கிறது. Hot 20 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Infinix Hot 20 5G விலை

Infinix Hot 20 5G விலை

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

பலத்த போட்டியை ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன்

பலத்த போட்டியை ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனானது பிளாஸ்டர் க்ரீன், ரேசிங் பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது லாவா பிளேஸ் 5ஜி, போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Only Rs 11,999: Infinix Hot 20 5G Launched in India with 12 5G Bands, 50MP Primary Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X