Home
Mobile

இதுதான் தவறு! ரூ.10,000 விலையில் இந்தியாவுக்கு வரும் Infinix Note 12i..

Infinix Note 12i ஸ்மார்ட்போன் செப்டம்பர் 2022 இல் இந்தோனேசிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வெளியான தகவல் உண்மையாகும் பட்சத்தில் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இம்மாதம் இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் தவறு! ரூ.10,000 விலையில் இந்தியாவுக்கு வரும் Infinix Note 12i.

Infinix Note 12i 2022 அம்சங்கள்

Infinix Note 12i ஸ்மார்ட்போன் முன்னதாகவே பிற நாட்டு சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி இதன் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். Infinix Note 12i 2022 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 100% DCI-P3 கவரேஜ், 92% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்

Infinix Note 12i ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போனானது வெப்பச் சிதறலுக்காக 3D 6-லேயர் கிராபெனின் குளிரூட்டும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 2டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

50 எம்பி பிரைமரி ஷுட்டர்

Infinix Note 12i கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி பிரைமரி ஷுட்டர், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டிருக்கிறது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜி VoLTE, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS ஆடியோ, FM ரேடியோ மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. 5000mAh பேட்டரி ஆதரவுடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இடம்பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான XOS 10.6 ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது.

இதுதான் தவறு! ரூ.10,000 விலையில் இந்தியாவுக்கு வரும் Infinix Note 12i.

Infinix Note 12i 2022 விலை

Infinix Note 12i 2022 விலை குறித்து பார்க்கையில், இது இந்தோனேசிய ரூபாய் மதிப்பில் 2,299,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதன் இந்திய விலை மதிப்பு ரூ.12,500 ஆகும். இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனானது Force Black, Alpine White மற்றும் Metaverse Blue வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இதே அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ரூ.10,000 விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இது இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்ஜெட் விலைப் பிரிவு ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பிற ஸ்மார்ட்போன்களுக்கு இது கடுமையான போட்டியை வழங்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

ஒரே ஒரு குறை மட்டுமே

ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் மொத்த இந்திய வாடிக்கையாளர்களின் கவனமும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது இருக்கும் சமயத்தில் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் அவ்வளவு வரவேற்பு பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபகாலமாக வெளியாகும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் கூட 5ஜி ஆதரவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Only one drawback: Infinix Note 12i Might Launching Soon in India With these Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X