இந்த சீனாக்காரங்களே இப்படி தான்! வெறும் 7 போன்களில் மட்டுமே Jio 5G சப்போர்ட்-ஐ அறிவித்த சீன நிறுவனம்!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் "தாறுமாறாக" கல்லா கட்டும் ஒரு சீன மொபைல் பிராண்ட் ஆனது, அதன் 7 ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஜியோ 5ஜி-க்கான ஆதரவு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது!

அதென்ன நிறுவனம்? Jio 5G-க்கான ஆதரவை பெறும் அந்த 7 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த சீனாக்காரங்களே இப்படி தான்!

இந்த சீனாக்காரங்களே இப்படி தான்!

முன்னதாக, மற்றொரு சீன நிறுவனமான சியோமி, அதன் துணை பிராண்ட் ஆன ரெட்மியுடன் சேர்த்து, மொத்தம் 17 போன்களில் மட்டுமே Airtel 5G-க்கான ஆதரவு கிடைக்கும் என்று அறிவித்து இருந்தது.

ஏனென்றால் சியோமி மற்றும் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் மொத்தமே 13 5ஜி ஸ்மார்ட்போன்கள் தான் உள்ளன. அதே போல தற்போது மேலுமொரு சீன மொபைல் பிராண்ட் அதன் 7 5ஜி ஸ்மார்ட்போன்களுக்குமான ஜியோ 5ஜி சப்போர்ட்-ஐ அறிவித்துள்ளது!

நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?

அதென்ன நிறுவனம்?

அதென்ன நிறுவனம்?

நாம் இங்கே பேசுவது பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒப்போ (Oppo) நிறுவனத்தை பற்றித்தான்.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோவுடன் "கூட்டு சேர்ந்து" பல்வேறு வகையிலான 5ஜி-ரெடி ஸ்மார்ட்போன்களில் (5G-ready smartphones) ஜியோ ஸ்டான்டலோன் (எஸ்ஏ) நெட்வொர்க்கை செயல்படுத்துவதாக ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

கீழ்வரும் 7 ஒப்போ போன்களில் ஒன்று உங்களிடம் இருந்தால்?

கீழ்வரும் 7 ஒப்போ போன்களில் ஒன்று உங்களிடம் இருந்தால்?

ஒப்போ நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஒப்போ ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அணுக கிடைக்கும் Jio True 5G சேவைகளை பெற முடியும்!

ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகளை அனுபவிக்க, உங்களிடம் ஒப்போ நிறுவனத்தின் 5ஜி எனேபிள்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்று, உங்கள் கையில் இருக்க வேண்டும்!

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

அந்த 7 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

அந்த 7 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

01. ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8)
02. ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8 Pro)
03. ஒப்போ ரெனோ 7 (Oppo Reno 7)
04. ஒப்போ எப்21 ப்ரோ 5ஜி (Oppo F21 Pro 5G)
05. ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் ( Oppo F19 Pro Plus)
06. ஒப்போ கே10 (Oppo K10)
07. ஒப்போ ஏ53எஸ் (Oppo A53s)

மேற்கண்ட 7 ஸ்மார்ட்போன்களுமே ஜியோ 5ஜி-க்கான ஆதரவை பெறும் சாப்ட்வேர் அப்பேட்டை பெற தொங்கி உள்ளன! ஒருவேளை குறிப்பிட்ட அப்டேட் உங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றால், கூடிய விரைவில் வந்து விடும்!

இனிவரும் ஒப்போ ஸ்மார்ட்போன்களில்?

இனிவரும் ஒப்போ ஸ்மார்ட்போன்களில்?

ஜியோ 5ஜி-க்கான ஆதரவை பெறும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அறிவித்த கையோடு ஒப்போ நிறுவனம் இன்னொரு தகவலையும் வெளியிட்டு உள்ளது.

இனிமேல் இந்தியாவில் அறிமுகமாகும் எல்லா ஒப்போ ஸ்மார்ட்போன்களுமே NSA மற்றும் SA நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும் என்று ஒப்போ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அதாவது இனி வெளியாகும் எல்லா ஒப்போ ஸ்மார்ட்போன்களுமே 5ஜி-க்கான ஆதரவுடன் வரும் என்று அர்த்தம்!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

இன்றைய தேதிக்கு ஜியோ 5ஜி கிடைக்கும் நகரங்களின் பட்டியல்:

இன்றைய தேதிக்கு ஜியோ 5ஜி கிடைக்கும் நகரங்களின் பட்டியல்:

ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் ஆனது ஆரம்பத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை மற்றும் நாத்வாரா நகரங்களில் மட்டுமே கிடைத்தது.

சமீபத்தில், இந்நிறுவனம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலும் கூட தனது ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகம் செய்தது.

குறிப்பாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பயனர்களுக்கு ஜியோவின் வெல்கம் ஆஃபர் அணுக கிடைக்கிறது. இதன் கீழ் குறிப்பிட்ட 2 நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி (அதாவது இலவசமாக) 1ஜிபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை பெற முடியும்!

வச்சி செய்ய போகும் - ஜியோ 5ஜி.. ஏனென்றால்?

வச்சி செய்ய போகும் - ஜியோ 5ஜி.. ஏனென்றால்?

ஜியோ ட்ரூ 5ஜி தான் - அடுத்த தலைமுறை வயர்லெஸ் நெட்வொர்க் தொழில்நுட்பங்களிலேயே மிகவும் மேம்பட்ட ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், 4G நெட்வொர்க், லோ-லேடன்சி, 5G வாய்ஸ், நெட்வொர்க் ஸ்லைசிங், எம்2எம் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் போன்ற விஷயங்களில் ஜியோ நிறுவனம் யாரையுமே சார்ந்து இருக்கவில்லை. இப்படியாக ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது ஒரு தனித்துவக் கட்டமைப்பாக உருமாறுகிறது!

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

பிச்சிக்கிட்டு பிறக்கப்போகும் 5ஜி ஸ்பீட்!

பிச்சிக்கிட்டு பிறக்கப்போகும் 5ஜி ஸ்பீட்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகப்பெரிய கலவையிலான 5G ஸ்பெக்ட்ரமை (700MHz, 3500MHz மற்றும் 26GHz) வாங்கி உள்ளது.

குறிப்பாக 700 மெகா ஹெர்ட்ஸ் ஆனது கோல்டன் ஸ்பெக்ட்ரம் பேண்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது அனைத்து (ஜியோ) பயனர்களுக்கும் நல்ல இன்டோர் கவரேஜை வழங்க உதவும் ஒரு ஸ்பெக்ட்ரம் ஆகும். மேலும் 700 மெகா ஹெர்ட்ஸை கொண்ட ஒரே ஆபரேட்டர் - ஜியோ மட்டுமே ஆகும்!

ஆகையால் (ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி) ஜியோ பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் 500 Mbps முதல் 1Gbps வரை என்கிற இன்டர்நெட் ஸ்பீட்-ஐ அனுபவிக்க முடியும்!

Best Mobiles in India

English summary
Only 7 Oppo smartphones in India to support jio 5g network as of now check full list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X