ரூ.1,644 விலையில் புதிய டியூவல் சிம் போன்: ஒனிடா அறிமுகம்

By Super
|
ரூ.1,644 விலையில் புதிய டியூவல் சிம் போன்: ஒனிடா அறிமுகம்
ஒனிடா நிறுவனம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது தொலைக்காட்சிப் பெட்டிதான். அந்த அளவுக்கு சிறந்த தொழில் நுட்பத்தை வழங்கியது ஒனிடா நிறுவனம். இப்பொழுது ஜி-601 என்ற புதிய மொபைல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒனிடாவின் புதிய ஜி-601 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இந்த அழகிய மாடல் மெட்டாலிக் நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இன்னும் அழகாக ஜொலிக்கிறது.

இதில் 0.3 மெகா பிக்ஸல் விஜிஏ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஜிட்டல் சூம் மூலமாக புகைப்படங்களை துல்லியமாக பார்க்க முடியும். இதன் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினால் மல்டி ஆடியோ/வீடியோ பார்மெட் வசதியினையும் பெறமுடியும்.

3.5 மிமீ ஆடியோ போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ எம்எஸ்டி கார்டு வசதி உள்ளது. 8 ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். இந்த மாடலில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதியினை எளிய முறையில் பெறலாம்.

இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் டபில்யூஏப்பி வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. கணினியில் இருந்து எதையும் மொபைலுக்கு மாற்றம் செய்ய யூஎஸ்பி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி-601 மாடலில் 1000 எம்எச்ஏ எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 6 மணி நேரம் டாக் டைம் வசதியினை பெற முடியும். இத்தனை வசதி கொண்ட இந்த மாடல் ரூ.1,644 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X