Home
Mobile

OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. ஆனால், சீன சந்தைக்கான இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. இம்முறை இந்த நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் சில புதிய சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மர்மமான தயாரிப்பின் வருகையை டீஸ் செய்த ஒன்பிளஸ்

புதிய மர்மமான தயாரிப்பின் வருகையை டீஸ் செய்த ஒன்பிளஸ்

சீனாவில் நடைபெறும் இந்த ஒன்பிளஸ் நிகழ்வில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சீன நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புதிய மர்மமான தயாரிப்பின் வருகையை டீஸ் செய்யும் விதத்தில் புதிய டீஸர் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் இது ஸ்மார்ட்போன் தான்

நிச்சயம் இது ஸ்மார்ட்போன் தான்

இந்த டீஸர் போஸ்டரில் இருப்பது நிச்சயம் ஒரு ஸ்மார்ட்போன் தான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்த புதிய சாதனம் ஒருவேளை ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒன்பிளஸ் Z அல்லது ஒன்பிளஸ் 8 லைட் என்று அழைக்கப்படும் குறைந்த விலை வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடல் இன்னும் சில மணிநேரங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 8 லைட்

ஒன்பிளஸ் 8 லைட்

சமீபத்தில் நடைபெற்ற ஒன்பிளஸ் நிகழ்ச்சியில் இந்த ஒன்பிளஸ் 8 லைட் என்றும் அழைக்கப்படும் ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யாமல் தனது ரசிகர்களுக்குப் பெரிய மனவருத்தத்தைக் கொடுத்துவிட்டது என்பதே உண்மை.

சீனாவில் மட்டும் அறிமுகம் செய்ய இரண்டு காரணங்கள்

சீனாவில் மட்டும் அறிமுகம் செய்ய இரண்டு காரணங்கள்

இப்படி இருக்கையில் சீனாவில் மட்டும் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.முதல் காரணம் ஒன்பிளஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் காரணமாக, தயாரிப்பு வழங்கல் பற்றாக்குறை இருக்கக்கூடும் என்றும், இதனால் உலக சந்தையில் அறிமுகம் செய்யாமல் இப்போதைக்குச் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்ய நிறுவனம் முடிவு செய்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இரண்டாவது காரணம் என்ன?

இரண்டாவது காரணம் என்ன?

இரண்டாவது காரணம் ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாகச் சீனா சந்தைக்கு மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிறது இன்னொரு தரப்பு.எது எப்படியாக இருந்தாலும் ஒன்பிளஸ் நிறுவனம் Weibo பக்கத்தில் வெளியிட டீசர், கண்டிப்பாக புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒன்பிளஸ் Z ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் Z ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் Z ஸ்மார்ட்போன், மீடியா டெக் டைமன்ஷன் 1000 சிப்செட் உடன், 6.4' இன்ச் கொண்ட 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷிங் ரேட் டிஸ்பிளே அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் X மாடலின் மேம்பட்ட வாரிசாக இருக்கும் என்று சிலர் நம்புகின்றனர்.

புதிய வார்ப்பு சார்ஜிங் பவர் பேங்க்

புதிய வார்ப்பு சார்ஜிங் பவர் பேங்க்

இதேபோல், இன்று நடைபெறும் சீனா நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன், வயர்லெஸ் புல்லட் இயர்போனஸ் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் நிறுவனம் புதிய வார்ப்பு சார்ஜிங் பவர் பேங்க் சாதனத்தையும் தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது, ஸ்மார்ட்போன்களுடன் இந்த புதிய பவர் பேங்க் சாதனமும் சீனாவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Z Also Known As OnePlus 8 Lite Could Be Launched Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X