Home
Mobile

NOKIA, Samsung-லாம் ஓரம்போ.. 7000mAh Battery உடன் வரும் புதிய OnePlus போன்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் சமீபத்தில் அதன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 16 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனம் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவது போல் தெரிகிறது.

ஒன்பிளஸின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஒரு மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது. அது என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் நோர்ட் 4 என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ஒன்பிளஸ் அடுத்தடுத்து வேறு என்னென்ன புதிய அறிமுகங்களை இந்தியாவில் நிகழ்த்தவுள்ளது? இதோ விவரங்கள்:

7000mAh Battery உடன் வரும் புதிய OnePlus போன்.. என்ன மாடல்?

மிகவும் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் 6,000mAh பேட்டரியை தாண்டியது. நினைவூட்டும் வண்ணம் இம்மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமா ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro) ஸ்மார்ட்போன் ஆனது 6100mAh பேட்டரியுடன் அறிமுகமானது. அதை தொடர்ந்து வரவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 4 (OnePlus Ace 4) மற்றும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஆகிய மாடல்களில் 6,500mAh பேட்டரி இடம்பெறும் என்கிற தகவல் வெளியானது.

ஆனால் இப்போது ஒன்பிளஸ் ​​பிராண்ட் ஆனது 7,000mAh பேட்டரியில் இயங்கும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.. நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் மற்றும் ஒப்போவின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமானது மிகப்பெரிய 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருகிறது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இந்த அளவிலான பெரிய பேட்டரியுடன் வரவிருக்கும் போன் ஒன்பிளஸ் பிராண்டின் ஃபிளாக்ஷிப் அல்லது ஃபிளாக்ஷிப் கில்லர் சீரீஸ் ஆக இருக்காது. மாறாக, இது ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும். இது இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இது எந்த ஸ்மார்ட்போனில் அறிமுகமாகும், அது எப்போது அறிமுகமாகும் என்கிற எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.

இருப்பினும் இது ஒரு மிட் ரேஞ்ச் மாடலாக இருக்கும் பட்சத்தில், இது நிறுவனத்தின் பிரபலமான நோர்ட் சீரிஸின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம், சிலிக்கான் பொருட்களை பயன்படுத்தும் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 4-ன் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். இருப்பினும், மேற்க்கூறப்பட்ட விலை அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதன் பொருள், ஒன்பிளஸ் நோர்ட் 4-ன் அசல் விலை ரூ.31,999 இருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4-ல் என்னென்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளே, அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரி.

ஒன்பிளஸ் நிறுவனம் வேறு என்னென்ன புதிய அறிமுகங்களை நிகழ்த்தவுள்ளது? ஜூலை 16 ஆம் தேதி நடக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் "சம்மர் லான்ச்" நிகழ்வில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஸ்மார்ட்வாட்ச், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் ஆகியவைகளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதுதவிர்த்து கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் புதிய "சன்செட் டூன்" என்கிற கலர் ஆப்ஷனும் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கலர் ஆப்ஷனை தவிர்த்து ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Working on New Mid Range Smartphone With 7000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X