7000mAh லாம் ஓரம்போ.. 9000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் உடன் புது OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
8000mAh பேட்டரி உடன் புதிய ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த வேகத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் பெரிய பேட்டரி உடன், அதாவது 9000mAh பேட்டரி உடனான ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ (OnePlus Ace 7 Pro) மாடல் ஆகும். சீனாவில் ஏஸ் சீரீஸின் கீழ் வரும் மாடல் இந்தியா மற்றும் மற்ற சந்தைகளில் ஆர் சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். ஆகையால் 9000mAh பேட்டரி உடன் வரும் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ மாடல் மீது நாமெல்லாம் (இந்தியர்கள்) ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை. சுவாரசியமாக ஒன்பிளஸ் ஏஸ் 7 மாடலிலும் கூட 9000mAh பேட்டரி இடம்பெறலாம்.

நினைவூட்டும் வண்ணம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது. பின்னர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் உடனான ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. இம்முறை ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் 7 மற்றும் ஏஸ் 7 ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒன்பிளஸ் ஏஸ் 7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட்களால் இயக்கப்படும். மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 185Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate) கொண்ட 6.78 இன்ச் அளவிலான பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்
மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 100W அல்லது 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இந்த இரண்டு மாடல்களிலும் 'ஆக்டிவ் ஃபேன் கூலிங்' (active fan cooling) வசதி மற்றும் எளிமையான வடிவமைப்பு (minimalist build) இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை இந்த சீரிஸில் உள்ள ப்ரோ மாடலில், சாம்சங்கின் JN5 சென்சார் அடிப்படையிலான 3.5x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் எல்லாமே எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் தான், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அம்சங்கள் அல்ல என்பதால், இவைகளை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.
8000mAh பேட்டரி உடன் அறிமுகமான ஒன்பிளஸ் என்6: இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹை-எண்ட் வேரியன்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.75 இன்ச் எச்டி எல்சிடி (HD LCD) டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
- 6ஜிபி வரையிலான ரேம் (RAM)
- 128GB வரையிலான ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (onboard storage)
- எப்/1.8 அப்பர்ச்சர் (aperture) கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா
- 10x வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதி
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 1080p/60 fps வரையிலான தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- டூயல்-வியூ (Dual-View) வீடியோ மோட்
- 8,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (wired fast charging) வசதி
- 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (reverse wired charging) வசதி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ்


Click it and Unblock the Notifications