iQOO கொட்டத்தை அடக்கிய OnePlus.. 185Hz ஸ்மூத் டிஸ்பிளே, 8500mAh பேட்டரி உடன் புது R-சீரீஸ் போன்.. எந்த மாடல்?
பெரும்பாலான நிறுவனங்கள் 8000mAh, 9000mAh என்கிற பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தும் மறுகையில்.. ஐக்யூ (iQOO) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் - 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவிற்காக (185Hz Refresh Rate Display) ஒரு யுத்தமே நடக்கிறது.
கடந்த மே மாத இறுதியில், 165ஹெர்ட்ஸ் மற்றும் 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்களுடன் கூடிய 2கே டிஸ்பிளேவை சோதிக்கும் சில பிராண்டுகளில் ஐக்யூ நிறுவனமும் உள்ளது என்கிற தகவல் வெளியாகி இருந்தது. இது - வரவிருக்கும் ஐக்யூ 16 மாடலில் 185ஹெர்ட்ஸ் பேனல் இடம்பெறலாம் என்கிற யூகங்களை கிளப்பிவிட்டுள்ளது.

ஏட்டிக்கு போட்டி: இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனமானது அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடலில் மட்டுமின்றி ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) மாடலிலும் கூட 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் டிஸ்பிளேவை பேக் செய்வதாக தகவல் வெளியாகி இருந்தன.
புது டிவிஸ்டு: இவ்விரு மாடல்களுமே இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனாவில் அறிமுகமாகலாம்; அதை தொடர்ந்து இந்தியாவிலும் (ஏஸ் மாடல் நார்ட் சீரீஸின் கீழ் வெளியாகலாம்) என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒன்பிளஸ் 16 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 7 மாடல்களை தவிர, மேலும் பல 185ஹெர்ட்ஸ் டிஸ்பிளே கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் உருவாக்கத்தில் இருக்கலாம் என்று புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
நிலையான அம்சம்: டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு (Smart Pikachu) என்பவர், ஒன்பிளஸ் நிறுவனமானது தனது ஸ்மார்ட்போன் சீரீஸ் முழுவதும் 185ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்களை ஒரு நிலையான அம்சமாக மாற்ற தயாராகி வருவதாக கூறியுள்ளார். மேலும், ஒரு புதிய டிஸ்பிளே உத்தியின் மூலம், தனது பிளாக்ஷிப் மாடல்களில் மட்டுமல்லாமல், மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலும் கூட ஹை ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேக்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த மாடல்களில் 185ஹெர்ட்ஸ் டிஸ்பிளே இடம்பெறும்? நினைவூட்டும் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) தவிர, ஏஸ் 6 (Ace 6), ஏஸ் 6டி (Ace 6T), ஏஸ் 6 அல்ட்ரா (Ace 6 Ultra), 15டி (15T), 15ஆர் (15R) மற்றும் நார்ட் 6 (Nord 6) ஆகிய அனைத்து ஸ்மார்ட்போன்களுமே 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகின்றன
இவற்றில், ஏஸ் பிராண்ட் போன்கள் அனைத்தும் மற்றும் 15டி ஆகிய மாடல்கள் சீன சந்தைக்கு மட்டுமேயானவை. அதே சமயம் 15, 15ஆர் மற்றும் நார்ட் 6 ஆகிய மாடல்கள் சீனாவிற்கு வெளியே உள்ள சில குறிப்பிட்ட சந்தைகளில் கிடைக்கின்றன. இப்போன்களின் அடுத்தடுத்த மாடல்கள் 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேக்களுடன் வரக்கூடும் என்று தெரிகிறது.
அதாவது ஒன்பிளஸ் 16 உடன் சேர்த்து ஒன்பிளஸ் 16ஆர் (OnePlus 16R) மற்றும் ஒன்பிளஸ் நார்ட் 7 (OnePlus Nord 7) ஆகியவற்றிலும் 185ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்கள் இடம்பெறலாம். இந்த இடத்தில் ஒன்பிளஸ் 16ஆர் மற்றும் நார்ட் 7 ஆகியவைகள் விரைவில் அறிமுகமாக வாய்ப்பில்லை. ஏனெனில் 15ஆர் மாடல் டிசம்பர் 2025 ஆம் ஆண்டிலும், நார்த் 6 மாடல் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முந்தைய வெளியீட்டு கால அட்டவணையின் அடிப்படையில், அவற்றின் அடுத்தடுத்த மாடல்கள் முறையே 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 185ஹெர்ட்ஸ் டிஸ்பிளே தவிர்த்து ஒன்பிளஸ் 16ஆர் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஒன்பிளஸ் 16ஆர் குறித்த லீக்ஸ் மிகவும் குறைவாகவே உள்ளன. சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இதில் ட்ரிபிள் 50எம்பி ரியர் கேமரா செட்டப் (வைட், அல்ட்ரா வைட் மற்றும் டெலிபோட்டோ) மற்றும் 32எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 120W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 7,500mAh முதல் 8,500mAh வரையிலான பேட்டரியை பேக் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications