அதிரும் மார்க்கெட்.. புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் ஒன்பிளஸ்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம் இந்நிறுவனத்தின் போன்கள் சற்று உயர்வான விலையில் தான் வெளிவருகின்றன. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் ஒன்பிளஸ் போனில் இருக்கும்.
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் சிவப்பு நிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக டீசர் செய்யதுள்ளது. இந்த டீஸர் அமேசான் மைக்ரோசைட்டில் காணப்பட்டது. குறிப்பாக இந்த புதிய போனா அல்லது ஏற்கனவே உள்ள போன் புதிய நிறத்தில் வெளிவருகிறதா என்பதை ஒன்பிளஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இணையதளத்தில் வெளியான தகவலின்படி, 18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 11ஆர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் கொண்டுவர உள்ள புதிய போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் அக்டோபர் 6-ம் தேதி ஒன்பிளஸ் பேட் கோ எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இதுகுறித்து விரிவான தகவலை இப்போது பார்ப்போம்.
ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது 11.35-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2.4கே ரெசல்யூஷன், 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
கலர்ஓஸ் 13.2 (ColorOS 13.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் ஆனது 523 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (Helio G99 Chipset) உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதாவது இந்த ஹீலியோ ஜி99 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் பேட் கோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

இந்த டேப்லெட் ஒன்று வைஃபை-ஒன்லி (WiFi Only), மற்றொன்று வைஃபை மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி (WiFi and Cellular Connectivity) உடன் வரலாம். மேலும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் அதே கர்வ்டு எட்ஜ் டிசைன் (Curved Edge Design) மற்றும் கேமரா செட்டப்பை (Camera Setup) நாம் பார்க்கலாம். பின்பு இந்த டேப்லெட் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
8எம்பி செல்பி கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா ஆதரவு இதில் உள்ளது. மேலும் 8000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








