ஆடிப்போன மார்க்கெட்.. 9000mAh பேட்டரி OnePlus Volkswagen ஸ்மார்ட்போன்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லீயே!
அப்புறம் என்னப்பா அடுத்தது ஒன்பிளஸ் மினி ஸ்மார்ட்போன் தானே.. என்று கிட்டத்தட்ட அனைத்து யூகங்களும், மொபைல் மார்க்கெட் ஆர்வலர்களின் கவனமும் - ஒன்பிளஸ் 15எஸ் (OnePluஸ் 15s) மீது திரும்பிய நேரத்தில்.. "இது நம்ம லிஸ்ட்லயே இல்லீயேப்பா" என்கிற படியாக ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போன் (OnePlus Volkswagen Smartphone) வந்து நிற்கிறது!
ஒன்பிளஸ் 15 (OnePlus 15), ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மாட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது வருகிற 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் பல புதிய மாடல்களை வெளியிடும் என்று கூறப்படுகிறது. அதில் சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக "வோக்ஸ்வேகன்" என்கிற கோட்நேம் (Codename) கொண்ட ஒரு ஸ்மார்ட்போனும் இருக்கும்.

எக்ஸ் (X) தளம் வழியாக, டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு உள்ள சமீபத்திய பதிவின்படி, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கு 'வோக்ஸ்வாகன்' என்ற குறியீட்டு பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும், இந்த ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.xx-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் உள்ளதை போலவே!
கேமராக்களை பொறுத்தவரை "கூறப்படும்" ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9000mAh என்கிற மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டியை கொண்டிருக்கும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லை.
இதுபோன்ற ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15T / OnePlus 15s) மற்றும் அதே ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடனான ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) ஆகிய மாடல்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன
குறிப்பிடத்தக்க வகையில் சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக வரும் மாடல் ஒன்பிளஸ் 15எஸ் ஆக இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சீனாவில் ஒன்பிளஸ் டர்போ ஆக அறிமுகமாகும் மாடல் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் "ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன்" ஸ்மார்ட்போன் ஆக வருமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என்று டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்ட அம்சங்கள் ஒன்பிளஸ் டர்போ மாடலின் லீக்டு அம்சங்களுடன் ஒத்துப்போகின்றன. உதாரணமாக ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் LTPS OLED டிஸ்பிளேவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் 9000mAh பேட்டரியையும் கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 6.31-இன்ச் BOE X3 OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC)
- 50MP சோனி IMX906 ப்ரைமரி கேமரா (சில அறிக்கைகள் 200MP சாம்சங் HP5 சென்சாரை பரிந்துரைக்கின்றன)
- 50MP சாம்சங் JN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 7,500mAh பேட்டரி
- 100W அல்லது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD பிளஸ் அமோல்இடி டிஸ்பிளே
- குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா
- 7400mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16
- IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்


Click it and Unblock the Notifications








