Home
Mobile

ஆஹா..இதுதான் OnePlus ஃபோல்ட் போன்-ஆ.. அழகு சும்மா அள்ளுதே! ரெடியா இருங்க..

ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதுமே தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் சற்று உயர்வான விலையில் போன்களை அறிமுகம் செய்தாலும், அதற்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் அந்த போன்களில் இருக்கும்.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்ட் (மடிக்கக்கூடிய ) போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த ஒன்பிளஸ் வி ஃபோல்ட் (OnePlus V Fold) என்று அழைக்கப்படும் போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆஹா..இதுதான் OnePlus ஃபோல்ட் போன்-ஆ.. அழகு சும்மா அள்ளுதே!

மேலும் இந்த ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போனின் அனைத்து அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் அதாவது ஒன்பிளஸ் வி ஃபோல்ட் ஆனது 7.8-இன்ச் 2கே ஃபோல்ட் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 6.3-இன்ச் அவுட்டர் (வெளிப்புற) AMOLEDடிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.

குறிப்பாக ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போனின் டிஸ்பிளே தனித்துவமான அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த போனின் 7.8-இன்ச் டிஸ்பிளே ஆனது 3200 x 1440பிக்சல்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

48எம்பி பிரைமரி லென்ஸ் + 48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போன். எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

அதேபோல் இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக கேமிங் பயன்களுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு Oxygen OS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா..இதுதான் OnePlus ஃபோல்ட் போன்-ஆ.. அழகு சும்மா அள்ளுதே!

16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த எடை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4800 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. இணையத்தில் வெளியான தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் இந்த ஒன்பிளஸ் வி ஃபோல்ட் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo courtesy:@onleaks x @smartprix, mysmartprice.com

Best Mobiles in India

English summary
OnePlus V Fold with Snapdragon 8 Gen 2 chipset will be launched soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X