Home
Mobile

ஒன்ப்ளஸ் 6 x மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் எடிஷன் பற்றிய விரவரங்கள்.!

ஸ்பெஷல் எடிஷன் தவிர்த்து, வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போன் வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

வரவிருக்கும் மே மாதம் ஒன்ப்ளஸ் பயனர்களுக்கான ஒரு மாதம் ஆகும். ப்ரீமியம் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒன்ப்ளஸ் நிறுவனம், மார்வெல் ஸ்டுடியோவுடன் இணைந்து, வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து ஒரு சிறப்பு பதிப்பையும் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த உள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலேயான இந்த ஒத்துழைப்பு ஆனது டிஸ்னி இந்தியாவுடன், ஒன்ப்ளஸ் கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தை குறிக்கிறது.

ஒன்ப்ளஸ் 6 x மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் எடிஷன் பற்றிய விரவரங்கள்.!

ஒன்ப்ளஸ் வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் சிறப்பு பதிப்பின் வெளியீட்டை உறுதி செய்யும் வண்ணம், ஒரு டீஸர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில், வருகிற மே 17, 2018 ஆம் தேதி கூறப்படும் ஸ்பெஷல் எடிஷன் ஆன ஒன்ப்ளஸ் 6 x மார்வெல்ஸ் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும். இந்த சிறப்பு பதிப்பானது, அமேசான் தளம் வழியாக பிரத்யேகமாக விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்றும் ஒன்ப்ளஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பு.!

ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பு.!

மேற்க்குறிப்பிட்டது போல், ஒன்ப்ளஸ் மற்றும் டிஸ்னியின் கூட்டணி ஆனது கடந்த டிசம்பர் 2017-ல் நிகழ்ந்தது. அதன் விளைவாக ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பு வெளியாகி, உலகெங்கிலும் விற்பனையானது. வரம்பிற்கு உட்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் வெளியான ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பு ஆனது இரண்டு சமூக (ஸ்மார்ட்போன் மற்றும் திரைப்படம்) ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது. அதுபோன்றே அனைத்து புதிய வண்ணம் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வால்பேப்பர்கள் மற்றும் தீம்ஸ் கொண்டு, ஒன்ப்ளஸ் 6-ன் சிறப்பு பதிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டீசரை கண்டபின்னர்.!

ஒன்ப்ளஸ் வெளியிட்டுள்ள டீஸர் வீடியோவில் காட்சிப்பட்ட, ஒன்ப்ளஸ் 6 x மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் ஸ்மார்ட்போனில் சில தனித்துவமான பார்வையை பெற முடிகிறது. கஸ்டம் டெக்ஸ்சர்டு பின்பக்கம் கொண்டுள்ள இது மிகவும் வெளிப்படையான ஒரு மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பு ஆகும். இந்த டீசரை கண்டபின்னர் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பின் கீழ் வெளியாகும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்றே கூறலாம்.

6,000 காம்ப்ளிமெண்ட்ரி திரைப்படக் டிக்கெட்டுகள்.!

6,000 காம்ப்ளிமெண்ட்ரி திரைப்படக் டிக்கெட்டுகள்.!

இந்த வாரத்திற்கு முன்னதாக, ஒன்ப்ளஸ் நிறுவனமானது, பேடிஎம் உடன் இணைந்து, வெளியான மார்வெல் திரைப்படத்திற்கான 6,000 காம்ப்ளிமெண்ட்ரி திரைப்படக் டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்திருந்ததும், மும்பை, புது தில்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத், கொச்சி, புனே மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த டிக்கெட்களுக்கான முன்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 6 பற்றி பேசினால்.!

ஒன்ப்ளஸ் 6 பற்றி பேசினால்.!

ஸ்பெஷல் எடிஷன் தவிர்த்து, வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போன் வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சமீபத்தில் தான், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்வரும் தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6-ன் செயல்திறன் மீதான தெளிவான பார்வை கொடுக்கும் ஒரு புதிய டீஸர் வீடியோ வெளியிடப்பட்டது. வேகம் மற்றும் செயல்திறன் நோக்கிய, மனிதனின் ஆர்வத்தை பற்றி அந்த வீடியோ பேசியது.

ஒன்ப்ளஸ் 6 ஆனது ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடனான 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் கொண்டு இயங்கும் . சேமிப்பகத்தை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் 6 ஆனது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் வெளி வரும். வடிவமைப்பை பொறுத்தவரை, டீஸ் செய்யப்பட்டுள்ள படங்களை வைத்து பார்க்கும் போது, வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது முற்றிலும் புதிய தோற்றத்தை கொண்டுவருவதாகவும், அது எதிர்காலத்திற்கான ஒரு வடிவமைப்பாக மாறும் என்பதையும் உணர முடிகிறது.

மேலும் ஒன்ப்ளஸ் 6 ஆனது தண்ணீர்-தூசி எதிர்ப்பு வடிவமைப்பு கொண்டு வரும் மற்றும் முந்தைய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே சரியான பிடிமான உணர்வையும் வழங்கும். இதன் பின்புறத்தில் கண்ணாடி வடிவமைப்பு இருப்பதால், முற்றிலும் புதிய வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் ஒன்ப்ளஸ் 6 வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து சுவாரஸ்யமான அம்சங்களையும் கொண்ட ஸ்பெஷல் எடிஷன் வெளியாவது கூடுதல் சிறப்பாகும். ஒன்ப்ளஸ் 6 x மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பு பற்றிய அனைத்து மேம்படுத்தல்களுக்கும், தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் காத்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus to unveil OnePlus 6 x Marvel Avengers Limited Edition on May 17. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X