Home
Mobile

வெச்சி செஞ்ச OnePlus.. 9000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 165Hz டிஸ்பிளேவுடன் Turbo போன்.. இதை யாருமே விடமாடீங்க!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் மிகப்பெரிய பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது, ரேம் மற்றும் மெமரி விவரங்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியாகி உள்ளது. இந்த ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் குறித்த விவங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 15 (OnePlus 15), ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை அடுத்து ஒன்பிளஸ் 15எஸ் (OnePluஸ் 15s) ஸ்மார்ட்போனை களமிறக்கும் வேலைகளில் ஒன்பிளஸ் நிறுவனம் இருக்கிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய பேட்டரி கேபாசிட்டியுடன் டர்போ சீரிஸ் மாடல்கள் வெளியாகும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

வெச்சி செஞ்ச OnePlus.. 9000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 165Hz டிஸ்பிளே!

இதில் ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. ஏனென்றால், இதில் 9000mAh பேட்டரி கிடைக்க இருப்பது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரியவந்தது. மேலும், ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்4 சிப்செட், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே போன்ற முக்கிய பீச்சர்கள் வெளியாகின. இப்போது, ரேம் மற்றும் மெமரி பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன.

ஒன்பிளஸ் டர்போ அம்சங்கள் (OnePlus Turbo Specifications): 6.78 இன்ச் எல்டிபிஎஸ் பிஓஇ ஓஎல்இடி (LTPS BOE OLED) டிஸ்பிளேவை இந்த டர்போ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமி கொண்ட வேரியண்ட்களில் வெளியாகிறது.

மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்களும் வெளியாகின்றன. மேலும், 9000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் கொண்டுள்ளது. யுனிக் பிளாக் (Unique Black), ஓசன் கிரீன் (Ocean Green) மற்றும் லைட் சேசர் சில்வர் (Light Chaser Silver) ஆகிய கலர்களில் உள்ளது.

இந்த 9000mAh பேட்டரியுடன் 217.25 கிராம் எடை வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. இந்த பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியாகி உள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்திய வெர்ஷன் வெளியாக உள்ளது.

இந்த டர்போ மாடலுடன் ஒன்பிளஸ் டர்போ வி (OnePlus Turbo V) மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப் (Snapdragon 7 Series Chip), 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், யுனிக் பிளாக் (Unique Black), நோவா ஒயிட் (Nova White) மற்றும் ஃபியர்லெஸ் ப்ளூ (Fearless Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜனவரி மாதத்தில் இதை எதிர்பார்க்கலாம்.

மேலும், இந்தியாவில் வெளியான ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 7400mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கிறது. ஆகவே, இங்கு ஒன்பிளஸ் டர்போ மாடல்கள் வெளியாகினால், அந்த மாடல்களே மிகப்பெரிய பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Turbo With Snapdragon 8s Gen4 9000mAh Battery Tipped To Launch in China Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X