Home
Mobile

2026-க்கு சிறப்பான சம்பவம்.. 9000mAh பேட்டரியுடன் புது OnePlus போன்.. 165Hz டிஸ்பிளே.. SD 8 சீரிஸ் சிப்செட்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் டர்போ சீரிஸ் மாடல்கள் அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகி வருவதால், அடுத்து வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரிகிறது. இப்போது, பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட் மோட்டில் வைத்துவிட்டது. இந்த ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்போன் 8300mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக வெளியாகி ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், அதிக பேட்டரி கேபாசிட்டியை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித் தூக்கியது. ஆனால், இதைவிட அதிக பேட்டரியுடன் ஒன்பிளஸ் டர்போ வர இருக்கிறது.

2026-க்கு சிறப்பான சம்பவம்.. 9000mAh பேட்டரியுடன் புது OnePlus போன்!

இப்போது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பீச்சர்கள் வெளியாகி இருப்பதால், அடுத்த மாதம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஒன்பிளன் நிறுவனமும் இந்த டர்போ போன் வெளியாக இருப்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

ஒன்பிளஸ் டர்போ அம்சங்கள் (OnePlus Turbo Specifications): ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்4 (Snapdragon 8s Gen 4) கிடைக்கலாம். 9000mAh பேட்டரி கிடைக்கிறது. இது ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனைவிட அதிகமாக இருக்கிறது. சொல்லப்போனால், அதிக பேட்டரி கொண்ட மாடலாக ஒன்பிளஸ் ஏஸ் 6டி இருக்கிறது.

இதைவிட அதிக பேட்டரி கேபாசிட்டி ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போனில் கிடைத்தால், அந்த மாடலே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருக்கும். 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. பட்ஜெட்டை பொறுத்தவரையில், ரூ.30,000 மற்றும் ரூ.40,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கும்.

ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.

6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன் போக 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) பாதுகாப்பை பெற்று கொள்ளலாம். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ஓஐஎஸ் (OIS) கிடைக்கிறது.

மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8300mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்பேன் கொடுக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.34,000 பட்ஜெட்டுக்குள் இருக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் டர்போ போனை இதே செக்மெண்ட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Turbo With 9000mAh Battery Snapdragon 8 Series Chip Specifications Tipped Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X